Viral Video: நடுரோட்டில் திடீரென ஓடிய நெருப்புக்கோழி, திகைத்த மக்கள்
பாக்கிஸ்தானின் சாலைகளில் ராட்சத பறவை ஒன்று பைக்கிற்கும் காருக்கும் இடையில் ஓடத் தொடங்கியது. இதைக் கண்ட அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.
Viral Video: நீங்கள் சாலையில் வாகனம் ஓட்டும்போது, திடீரென்று ஒரு விலங்கோ அல்லது ஒரு பறவையோ உங்கள் அருகில் ஓட ஆரம்பித்தால், என்ன செய்வீர்கள்? முதலில் ஆச்சரியம் தோன்றும், பின்னர், இந்த அரிய நிகழ்வை படம் பிடிக்க வேண்டும் என போனை தேடுவோம்.
அப்படி ஒரு நிக்ழவுதான் பாகிஸ்தானில் நடந்தது. பாக்கிஸ்தானின் (Pakistan) சாலைகளில் ராட்சத பறவை ஒன்று பைக்கிற்கும் காருக்கும் இடையில் ஓடத் தொடங்கியது. இதைக் கண்ட அனைவரும் ஆச்சரியப்பட்டனர். பின்னர் அனைவரும் இந்த காட்சியை தங்கள் போன்களில் படம் பிடிக்கத் துவங்கினர். இந்த பறவையால் காற்றில் பறக்க முடியாது, ஆனால் அதிக வேகத்தில் நன்றாக ஓட முடியும்.
வித்தியாசமான வீடியோ மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது
இணையத்தில் பல்வேறு விசித்திரமான செய்திகள் நிரம்பியுள்ளன. பாகிஸ்தானின் பெரிய நகரங்களில் ஒன்றான லாகூர் தெருவில் நடந்த இந்த சம்பவமும் அனைவரையும் திகைக்க வைத்துள்ளது.
நெருபுக்கோழி அதிவேகமாக ஓடுவதை மக்கள் பார்த்தனர்
லாகூரில் ஒரு நெடுஞ்சாலையின் நடுவில் ஒரு நெருபுக்கோழி அதிவேகமாக ஓடுவதை மக்கள் கண்டனர். நெருபுக்கோழியை அந்த சாலையில் பயணித்த பலர் படம் எடுத்தனர். அதை சமூக ஊடகங்களிலும் பகிர்ந்து வைரல் ஆக்கியுள்ளனர். லாகூர் கால்வாய் சாலையில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ALSO READ: Cobra Viral Video: வீட்டிற்குள் புகுந்தது 15 அடி நீளமுள்ள ஆபத்தான நாகப்பாம்பு
இந்த வீடியோ ஒரு லட்சம் முறை பார்க்கப்பட்டுள்ளது
இந்த காணொளி (Viral Video) ஒரு லட்சம் முறை பார்க்கப்பட்டு, பலதரப்பட்ட விமர்சனங்களை பெற்று வருகிறது. அலுவலகம் செல்பவர்கள் முதல் பஸ் பிடிப்பவர்கள் வரை பலரும் அந்த சாலையில் இந்த பறவை ஓடுவதை கண்டு வியந்தனர்.
இது குறித்து எழுதிய ஒரு பயனர், “சாலையில் வாகனம் ஓட்டுபவர்கள் இந்த நெருப்புக்கோழியை மனதில் வைத்து ஓட்டினர். இது ஒரு நல்ல விஷயம். மக்கள் வாகனம் ஓட்டும் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர்.” என்று எழுதியுள்ளார்.
ALSO READ: Gold of God:கடவுள் தங்கத்தை உருக்காதே தமிழக அரசே! கையெழுத்து வேட்டை தீவிரம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR