சென்னை: கோயில்களில் இருக்கும் பயன்படுத்தப்படாத தங்கத்தை உருக்கும் தமிழக அரசின் முடிவை எதிர்த்து Change.org அமைப்பு சேகரித்து வரும் மனுவில் 40,000 க்கும் அதிகமானவர்கள் கையெழுத்து போட்டுள்ளனர். இந்த கையெழுத்து வேட்ட மேலும் வேகமெடுக்கிறது.
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் தமிழக அரசு அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள மனுவில், எந்த நகைகளை உருக்குவது என்பதை முடிவு செய்வதில் மதச்சார்பற்ற அரசுக்கு எந்தப் பங்கும் இல்லை என்றும், அரசின் அவசர நடவடிக்கைகள் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை மீறுவதாக இருப்பதாகவும் கூறுகிறது.
கோயில் தங்கத்தை (பக்தர்களிடமிருந்து நன்கொடையாகப் பெறப்படும்) உருக்கி தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் டெபாசிட் செய்து, அதன் மூலம் கிடைக்கும் நிதியை, ஆலயப் பராமரிப்புக்காகப் பயன்படுத்தும் திட்டத்தை திமுக தலைமையிலான மாநில அரசு சமீபத்தில் அறிவித்தது. இந்த செயல்முறையை, மூன்று முன்னாள் நீதிபதிகள் தலைமையிலான குழுவை தமிழக அரசு நியமித்துள்ளதாக, இந்து சமய அறநிலையத் துறை (Hindu Religious and Charitable Endowments Department (HR&CE)) துறை தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு ஜூன் மாதம் சென்னை உயர் நீதிமன்றம், தானே முன்வந்து எடுத்துக் கொண்டு வழங்கிய தீர்ப்பை மேற்கோள் காட்டிய இந்த மனு, கடந்த 60 ஆண்டுகளாக கோயில்களில் உள்ள தங்கம் தொடர்பாக தணிக்கை எதுவும் செய்யப்படவில்லை என்றும், நகைகளின் இருப்பு மற்றும் அது தொடர்பான பதிவேடுகள் எதுவும் இல்லை என்றும் கூறுகிறது.
HR&CE minister Tamilnadu : Tamil Nadu CM : Don’t Melt Temple Gold:# Temple Jewels not government property - Sign the Petition! https://t.co/MQJ4c4VtjA via @ChangeOrg_India I firmly believe govt has no biz to capture temple property which belongs to deity CC @sgurumurthy
— ASHWANI MAHAJAN (@ashwani_mahajan) October 24, 2021
இந்திய தொல்லியல் துறையின் (Archaeological Survey of India) (ASI) நிபுணத்துவத்தின் கீழ், மத்தியப் பதிவேட்டை உருவாக்குதல் மற்றும் புதுப்பித்தல் ஆகியவற்றைத் தவிர, இந்தியாவின் கன்ட்ரோலர் ஆடிட்டர் ஜெனரல் (CAG) மூலம் வெளிப்புறத் தணிக்கையை நடத்துமாறு சம்பந்தப்பட்ட மாநில அரசின் இந்து சமய அறநிலையத் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நகைகளின் விவரங்கள், பொதுமக்கள் அணுகக்கூடிய இணையதளத்தில் வெளியிடப்பட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த நிலையில், நீதிமன்ற அறிவுறுத்தல்களை மீறி, கோவில் தங்கத்தை உருக்கும் முடிவையும், நடவடிக்கைகளையும் தமிழக அரசு துரிதப்படுத்தியிருப்பதாக, இந்த மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக, கோயில் தங்கத்தை உருக்குவது தொடர்பான விஷயத்தில் கோயில் அறங்காவலர்கள் மட்டுமே முடிவெடுக்கும் அதிகாரம் கொண்டவர்கள் என்றும், இந்து சமய அறநிலையத் துறைக்கு முடிவெடுக்க உரிமை இல்லை என்றும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ALSO READ | அழகுக்கு பேரழகு சேர்க்கும் இதுவொரு அழகிய நகைக்காலம்!
பல ஆண்டுகளாக பல கோவில்களில் அறங்காவலர்கள் நியமிக்கப்படாமல் உள்ளனர் என்றும், அறங்காவலர்கள் இல்லாமலேயே ஆலயங்கள் செயல்பட மாநில அரசு அனுமதித்தது, சட்ட விரோதம் என்றும் இந்த மனு சுட்டிக் காட்டுகிறது.
மு.க.ஸ்டாலின் தலைமையிலான மாநில அரசின், ‘ஆலய தங்கம் உருக்கும்’ நடவடிக்கையை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்து வருகிறது. 1977 முதல் சுமார் 5 லட்சம் கிராம் அளவிலான கோயில் தங்கம் உருக்கப்பட்டுள்ளதாகவும், கடவுளர்களின் நகைகளை உருக்குவது வழக்கமான நடைமுறை தான் என்றும், அண்மையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது, மாநில அரசு தெரிவித்திருந்தது.
கோயில்களை நிர்வகிப்பது மட்டுமே அரசின் செயல்பாடு என்றும், பக்தர்களால் நன்கொடையாக கொடுக்கப்பட்ட கடவுளுக்கு சொந்தமான நகைகளை உருக்கும் அதிகாரம் அரசுக்கு இல்லை என்று மனுதாரர்கள் உயர் நீதிமன்றத்தில் வாதிட்டனர். மேலும், பழங்கால தங்க ஆபரணங்களும் உருக்கப்படுகின்றனவா என்றும், இது தொடர்பான தெளிவான பதிவுகள் உள்ளதா என்றும் மனுதாரர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
Also Read | 15 இந்திய மொழிகளில் HOOTE செயலி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR