இன்றைய தலையில்லா பாம்பின் வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணைய உலகம் என்பது தற்போது ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். பொதுவாக இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் வன விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாம்புகள் இணையத்தின் ஹீரோக்கள் என்றே கூறலாம். பாம்பு வீடியோக்கள் மீது இணையவாசிகளுக்கு எப்போதுமே ஒரு தனி கிரேஸ் உள்ளது. மனிதர்களை அதிக அளவில் கவர்ந்த உயிரினங்களில் பாம்புகளுக்கு முக்கிய இடம் உள்ளது. அவை உலகின் மிக அஞ்சப்படும் உயிரினங்களில் ஒரு உயிரினமாக கருதப்படுகின்றன. மேலும் சில மரபுகளில், அவை தெய்வங்களாகவும் வணங்கப்படுகின்றன. இவற்றை பற்றிய பல கதைகள் மற்றும் நாட்டுப்புறக் கதைகளும் உள்ளன. இவற்றைப் பற்றி அறிய நாம் இன்னும் ஆர்வமாக இருப்பது இயற்கையானது. அந்தவகையில் பாம்புகளின் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன.


மேலும் படிக்க | ஆட்டோவில் கூலர்: இந்த ஆட்டோக்கார அண்ணனுக்கு ஒரு ஓ போடுங்க... வைரல் வீடியோ


இந்த நிலையில் சமீபத்திலும் ஒரு பாம்பு வீடியோ பகிரப்பட்டு வைரல் ஆகி வருகின்றது. மேலும் இந்த வீடியோ இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, இது ஒரு உண்மையான வினோதமான நிகழ்வாகும். அதன்படி இதில் ஒரு தலையில்லாத பாம்பு, தனது சொந்த உடலைக் கடித்துக்கொண்டு தன்னைத்தானே ஆக்கிரமிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளது.


இந்த குழப்பமான வீடியோவை கண்ட இணையவாசிகள் அதிர்ச்சி மற்றும் திகிலடையச் செய்துள்ளது. இந்த வினோதமான நிகழ்வின் வீடியோ கதி கலங்க வைத்துள்ளது. இதுபோன்ற வீடியோவை இதுவரை யாரும் பார்த்திருக்க முடியாது. இந்த வீடியோவில் தலை துண்டிக்கப்பட்ட ஒரு பாம்பை காண முடிகின்றது. இதன் தலை ஏதாவது ஒரு விபத்தில் துண்டிக்கப்பட்டதா அல்லது ஆய்வுக்காக வேண்டுமென்றே துண்டிக்கப்பட்டதா என்பது தெரியவில்லை. மேலும் இதில் ஆச்சரியப்படும் விதமாக, தலை துண்டிக்கப்பட்ட பாம்பு, தன்னை தானே தாக்கிக் கொள்கிறது.


வியக்க வைக்கும் தலையில்லா பாம்பின் வீடியோவை இங்கே காணுங்கள்:



இந்த வைரலான வீடியோவை பல கோடிக்கும் அதிகமான பார்வைகள் பெற்றுள்ளது மற்றும் லட்சக்கணக்கானோர் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும் இந்த வீடியோவை @OTerrifying என்கிற டிவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. மேலும் இந்த வீடியோவுக்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் தொடர்ந்து வந்துக்கொண்டே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)


மேலும் படிக்க | உயிருக்கு போராடிய ஆமையை மனிதர்களிடம் ஒப்படைத்த சுறா - வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ