மாட்டிடம் சென்று நோக்கு வர்மம் செய்த குடிமகன் -அப்புறம் என்ன நடந்துச்சு தெரியுமா? வைரல் வீடியோ
குடிமகன் ஒருவர் மாட்டிடம் சென்று நோக்கு வர்மம் கலையை காண்பிடித்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகியுள்ளது.
குடிமகன்கள் எப்போதும் தனி ரகம் தான். அவர்களுக்குள் மது சென்றுவிட்டால், அவர்கள் இப்போது இருக்கும் உலகத்தில் இருக்கமாட்டார்கள். தங்களுக்கான உலகத்துக்கு சென்று செய்யும் சேட்டைகளுக்கு அளவு இருக்காது. வீண் வம்பிழுப்பது முதல் வேண்டாத வேலைகளை செய்வது வரை என அத்தனை காமெடிகளையும் அரங்கேற்றுவார்கள். அதுவும் ஓயின்ஷாப்பில் இருந்து வெளியே வந்ததும் அவர்களின் சேட்டையை நீங்கள் பார்த்துவிடலாம். அப்படி சேட்டை செய்த குடிமகனின் வீடியோ ஒன்று தான் இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில் குடிமகன் புல்லாக குடித்துவிட்டு மாட்டிடம் சென்று நோக்கு வர்மம் கலையை காண்பித்துக் கொண்டிருக்கிறார்.
அதாவது குடித்த அவருக்கு போதை புல்லாக தலைக்கு ஏறிவிட்டது. அதனால் அவருக்கு தான் என்ன செய்கிறோம் என்றெல்லாம் தெரியவில்லை. ஓயின்ஷாப்பில் இருந்து நடந்து செல்லும்போது மாடு ஒன்று சாலை ஓரமாக நிற்கிறது. அதனை பார்த்து முறைக்கும் குடிமகன், தங்களுக்கே உரிய குடிமகன் பாஷையில் மாட்டிடம் உரையாடுகிறார். திடீரென தன்னை ஒரு யோகி மற்றும் சித்தர்போல் நினைத்துக் கொண்டு, மாட்டிடம் நோக்கு வர்மம் கலையை காண்பிக்கிறார். மாட்டின் கண்களை உற்றுப் பார்த்து, அதனிடம் பேச்சு கொடுகிறார்.
மேலும் படிக்க | ஆக்ரோஷமாக துரத்தும் முதலை ... தப்பிக்க ஓடும் ஊழியர்: பதறவைக்கும் வீடியோ வைரல்
அவரின் பேச்சு கொடுப்பதை கவனித்த மாடு திடீரென கொம்பை கொண்டு வேகமாக அசைக்கிறது. கொஞ்சம் கோபமாக மாறி அவரை முட்டியிருந்தாலும் அப்போது அவரை காப்பாற்றுவதற்கு அங்கு யாரும் இல்லை. சாலையில் சென்றவர்கள் எல்லாம் மாட்டிடம் விளையாடிய குடிமகனை பார்த்து சிரித்துக் கொண்டே சென்றனர். இன்ஸ்டாகிராமில் வீடியோவை பகிர்ந்த பன்ருட்டி பசங்க ஐடியும், குடிமகனின் செயலுக்கு ஏற்ப ஏழாம் அறிவு படத்தின் வாய்ஸை எடுத்து எடிட் செய்து போட்டிருக்கிறார்கள். இதுவரை இந்த வீடியோ ஆயிரக்கணக்கான பார்வைகளைப் பெற்றிருக்கிறது. குடித்துவிட்டால் வீட்டில் இருக்காமல் இப்படி சாலையில் அதக்களம் செய்வது நல்லதா? என்றும் ஒருசிலர் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.
மேலும் படிக்க | நாகப்பாம்பின் வாலை இழுத்து அதிர்ச்சி கொடுத்த குரங்கு, வீடியோ வைரல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ