ஆக்ரோஷமாக துரத்தும் முதலை ... தப்பிக்க ஓடும் ஊழியர்: பதறவைக்கும் வீடியோ வைரல்

வெளிநாட்டில் முதலை பண்ணையில் ஊழியர் ஒருவரை முதலை தாக்குவதற்காக சேஸிங் செய்யும் அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது.     

Written by - S.Karthikeyan | Last Updated : May 22, 2023, 06:27 PM IST
  • ஊழியரை தாக்க ஓடும் முதலை
  • தப்பிக்க ஓடும் பூங்கா ஊழியர்
  • இணையத்தில் வீடியோ வைரல்
ஆக்ரோஷமாக துரத்தும் முதலை ... தப்பிக்க ஓடும் ஊழியர்: பதறவைக்கும் வீடியோ வைரல் title=

நாள்தோறும் ஆயிரக்கணக்கான வீடியோக்களால் இணையம் நிரம்பி வழிகிறது. அவற்றில் ஒரு சில வீடியோக்கள் மட்டுமே பார்ப்பதற்கு வசீகரமாகவும், பயமாகவும் இருக்கும். அப்படியான ஒரு வீடியோ சமீபத்தில் பேஸ்புக்கில் வெளியிடப்பட்டது. அது பகிரப்பட்டதிலிருந்து, பேஸ்புக்கில் அதிகமானோரால் பார்க்கப்பட்ட வீடியோவாக மாறியிருக்கிறது. அப்படி என்ன சுவாரஸ்யம் என்றால், பூங்கா ஒன்றில் இருக்கும் ராட்சத முதலை ஒன்று அங்கிருக்கும் பூங்கா ஊழியர்களை சேஸிங் செய்கிறது. இந்த காட்சிகள் காண்போரை பதைபதைக்க வைக்கிறது.   

மேலும் படிக்க | தாகத்தால் தவித்த விஷ நாகப்பாம்புக்கு தண்ணீர் கொடுத்த நபர்: வீடியோ வைரல்

இந்த வீடியோ Gatorland Orlando-ன் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பூங்காவில் 110- ஏக்கரில், ஆயிரக்கணக்கான முதலைகள் வளர்க்கப்படுகின்றன. ராட்சத முதலைகள் இருக்கும் இந்த பூங்காவை சுற்றுலாப் பயணிகள் நேரில் சென்று பார்வையிடலாம். அதுமட்டுமில்லாமல் பூங்காவில் பறவைக் கூடம், செல்லப்பிராணி பூங்கா ஆகியவற்றுடன் சுற்றுலாப் பயணிகளுக்காக கேளிக்கை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. 

வீடியோவில் இருக்கும் முதலை, கியூபா முதலை ஆகும். சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட வீடியோ 11,000 முறைக்கு மேல் பகிரப்பட்டுள்ளது. 8,100 லைக்குகளையும் நெருங்கியுள்ளது. வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் "அப்படி ஒரு முதலையை நீங்கள் பார்க்க மாட்டீர்கள் ! என தன்னுடைய வியப்பை வெளிப்படுத்தியுள்ளார். இவ்வளவு பெரிய ராட்சத முதலையை இதுவரை பார்த்ததில்லை எனக் கூறியிருக்கும் நெட்டிசன், அது தாக்கியிருந்தால் என்னவாகியிருக்கும் என அச்சத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். 

மேலும் படிக்க | ஆத்தாடி..ஒரே மரத்தில் இத்தனை விஷப் பாம்புகளா? வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News