நாகப்பாம்பின் வாலை இழுத்து அதிர்ச்சி கொடுத்த குரங்கு, வீடியோ வைரல்

Monkey King Cobra Fight: ராஜ நாகப்பாம்புடன் குரங்கு சண்டையிடும் வீடியோ வெளியாகியுள்ளது. இதில் நாகப்பாம்பு படம் எடுத்து ஆடுவதை வீடியோவில் காண முடிகின்றது. 

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 23, 2023, 10:38 AM IST
  • பாம்பின் வாலை இழுத்து சண்டை இடும் குரங்கு.
  • கடுப்பான கருப்பு நாகப்பாம்பு.
  • முரட்டு பாம்பின் வைரல் வீடியோ.
நாகப்பாம்பின் வாலை இழுத்து அதிர்ச்சி கொடுத்த குரங்கு, வீடியோ வைரல் title=

இன்றைய நாகப்பாம்பின் வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் பாம்புகள் மற்றும் குரங்குகள் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. 

பாம்புகள் இணையத்தின் ஹீரோக்கள் என்றே கூறலாம். பாம்பு வீடியோக்கள் மீது இணையவாசிகளுக்கு எப்போதுமே ஒரு கிரேஸ் உள்ளது. மனிதர்களை அதிக அளவில் கவர்ந்த உயிரினங்களில் பாம்புகளுக்கு முக்கிய இடம் உள்ளது. அவை உலகின் மிக அஞ்சப்படும் உயிரினங்களில் ஒரு உயிரினமாக கருதப்படுகின்றன. மேலும் சில மரபுகளில், அவை தெய்வங்களாகவும் வணங்கப்படுகின்றன. இவற்றை பற்றிய பல கதைகள் மற்றும் நாட்டுப்புறக் கதைகளும் உள்ளன. இவற்றைப் பற்றி அறிய நாம் இன்னும் ஆர்வமாக இருப்பது இயற்கையானது. பாம்புகளின் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. 

மேலும் படிக்க | தாகத்தால் தவித்த விஷ நாகப்பாம்புக்கு தண்ணீர் கொடுத்த நபர்: வீடியோ வைரல்

சமீபத்திலும் ஒரு பாம்பு வீடியோ பகிரப்பட்டு வைரல் ஆகி வருகின்றது. ஆனால் இது வழக்கமாக பகிரப்படும் வீடியோக்களிலிருந்து மிகவும் வித்தியாசமானது. ஏனெனில் இதில் குரங்கு மற்றிம் பாம்பின் சண்டையை காட்டும் வீடியோவாகும். 

தற்போது வைரலாகி வரும் வீடியோவில் குரங்கு ஒன்று காட்டில் இருப்பதையும் நாகப்பாம்பு படம் எடுத்து ஆடுவதையும் வீடியோவில் காண முடிகின்றது. ஆனால், திடீரென்று குரங்கு பாம்பின் முன் குதித்து அதன் வாலை அசால்டாக இழுக்கிறது. பின் குரங்கு அந்த பாம்பை பாடாய் படுத்துகிறது. இதில் கடுப்பான அந்த நாகப்பாம்பு உடனடியாக அந்த குரங்கை தாக்க முயற்சி செய்கிறது. ருப்பினும் அந்த குரங்கு தொடர்ந்து அந்த பாம்பை வம்பிழுக்கு இழுத்துக் கொண்டே இருக்கிறது. தற்போது இந்த வீடியோவை பார்க்கும் பொது "எங்க தலைக்கு தில்ல பாத்தியா" இந்த வசனம் தான் ஞாபத்துக்கு வருகிறது. அந்த அளவிற்கு காமெடி வீடியோவாக இது தெரிகிறது. 

பாம்பை பாடாய் படுத்தும் குரங்கின் வீடியோவை இங்கே காணலாம்: 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

குரங்குக்கும் ராஜா நாகப்பாம்புக்கும் இடையே நடந்த இந்த சண்டை எந்த முடிவுக்கும் வராததால் இருவரும் அங்கிருந்து சென்றுவிட்டனர். இருவருக்கும் இடையே நடந்த சண்டையை யாரோ மொபைல் கேமராவில் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். அத்துடன் இந்த வீடியோ shnoyakam என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஆயிரக்கணக்கான வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. மேலும் இந்த பார்த்து அதிர்ந்து போன இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள்.

(இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | ஆத்தாடி..ஒரே மரத்தில் இத்தனை விஷப் பாம்புகளா? வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News