Viral Video: சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. இவற்றைக் கண்டு நெட்டிசன்கள் தங்கள் மன அழுத்தங்களை மறந்து ரசித்து சிரிக்கின்றனர். இதுபோன்ற ஒரு வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகின்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாலிவுட்டின் புகழ்பெற்ற 'சாத் சாமுந்தர் பார்' பாடலின் ரீமிக்ஸ் செய்யப்பட்ட பதிப்பிற்கு ஒரு பெண் ரயில்வே பிளாட்பாரத்தில் நடனமாடும் வீடியோ வைரலாகி (Viral Video) வருகிறது. தான் ஒரு இன்ஸ்ட்ராகிராம் இன்ஃப்ளூயன்சர் என தன்னை விவரித்துக்கொள்ளும் சஹேலி ருத்ரா என்ற அந்த பெண்ணின் வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.


அவர் இந்த நடன வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த பிறகு, அவரது வீடியோவுக்கு மில்லியன் கணக்கான வியூஸ்கள் கிடைக்கத் துவங்கின.



இந்த வீடியோ (Video) கொல்கத்தாவின் புறநகர் ரயில்வே சந்திப்பு நிலையங்களில் ஒன்றில் படமாக்கப்பட்டு ஏற்கனவே 1.8 மில்லியன் வியூஸ்களைப் பெற்றுள்ளது.


ALSO READ:  Viral Video: அழகிய தோகைகளை விரித்து ஆடும் ஆண் மயில்; ‘NO’ சொன்ன பெண் மயில் ..!!


இந்த வைரல் வீடியோவில், அந்த பெண் நடன அசைவுகளை அழகாக வெளிப்படுத்தி, முழுமையான துடிப்புடன் நடனமாடுவதைக் (Dance Video) காண முடிகின்றது. அவர் ரயில்வே பிளாட்பாரத்தில் நடனமாடும்போது, அவரைச் சுற்றி நின்றிருந்த மக்கள் அவருடைய உற்சாகமான நடன அசைவுகளால் கவரப்பட்டு ஈர்க்கப்பட்டதைக் காண முடிகிறது.


வீடியோவில், சஹேலி ருத்ரா நீல நிற ஜீன்ஸ், லாவெண்டர் டாப் அணிந்து, ஒரு பையுடனும் முகக்கவசம் அணிந்து சூப்பராக நடனமாடுவதைக் காண முடிகின்றது.


அவரது வைரல் வீடியோவுக்கு 1,800,500 லைக்குகளும் பல நல்ல கமெண்டுகளும் கிடைத்துள்ளன. ஆனால், பொது இடத்தில் நடனமாடியதற்காக சில பயனர்கள் அவரை விமர்சித்தும் உள்ளனர். 


சாத் சாமுந்தர் பார் என்ற பாடல், திவ்யா பாரதி மற்றும் சன்னி தியோல் நடித்த விஸ்வாத்மா திரைப்படத்தின் 90 களின் பிரபலமான பாடலாகும்.


ALSO READ: Viral Video: பிபிஇ கிட் அணிந்து கர்பா நடனம், நவராத்திரி விழாவில் கோவிட் விழிப்புணர்வு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR