சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. இவற்றைக் கண்டு நெட்டிசன்கள் தங்கள் மன அழுத்தங்களை மறந்து ரசித்து சிரிக்கின்றனர். இதுபோன்ற ஒரு வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகின்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த வீடியோவில் ஏடிஎம் (ATM) இயந்திரம் ஒன்றிலிருந்து ஒரு பெண் பணம் எடுக்கிறார். அப்போது அவர், தன்னை மறந்து நடனமாடுவதைக் காண முடிகின்றது. ஏ.டி.எம் மெஷினிலிருந்து பணம் வருவதற்குள், அந்த பெண் மகிழ்ச்சியாக நடனம் ஆடும் வீடியோ சமூக ஊடகங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.


இன்ஸ்டாகிராமில் (Instagram) இந்த வீடியோ 12 லட்சத்திற்கும் அதிகமான வியூஸ்களைப் பெற்றுள்ளது. இந்த வீடியோ 'ghantaa' என்ற பயனரால் பகிரப்பட்டுள்ளட்து. இந்த வீடியோவைப் பகிர்ந்த நபர், அதில், “இதுதான் சம்பளம் கிடைத்தவுடன் கிடைக்கும் மகிழ்ச்சி” என்று எழுதியுள்ளார்.


ALSO READ: Self Confidence: கடுமையாக உழைக்கும் 75 வயது பாட்டியின் வீடியோ வைரல்  


இந்த வைரல் வீடியோவை இங்கே பாருங்கள்:



அந்த பெண் ஏடிஎம் இயந்திரத்தின் முன் எதற்காக ஆடத் துவங்கினார் என்பதற்கான காரணம் தெரியவில்லை என்றாலும், சமூக ஊடக பயனர்கள் அவருக்கு இது சம்பள நாளாக இருக்கும் என்றும், சம்பளம் தன் கையில் கிடைத்த மகிழ்ச்சியில் அவர் நடனமாடுகிறார் என்றும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.


வீடியோவில் (Viral Video), கருப்பு டாப் மற்றும் கருப்பு முகக்கவசம் அணிந்த பெண், சில வேடிக்கையான மற்றும் லாவகமான நடன அசைவுகளுடன் அசத்தலாக நடனமாடுவதைக் காண முடிகிறது. வீடியோவின் முடிவில், ஏ.டி.எம் மெஷினிலிருந்து பணம் வெளியே வந்தவுடன், அதை எடுத்துக்கொள்ளும் அந்த பெண், ஏ.டி.எம் மெஷினுக்கு நன்றியுடன் வணக்கம் கூறிவிட்டு செல்வதையும் காண முடிகின்றது.


ALSO READ: Viral Video: கூரை மீது ஏறி அமர்ந்து கீழே வர மறுத்த மணப்பெண், காரணம் என்ன? 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR