Viral Video: ஏம்மா.. உனக்கு விளையாட வேற ஆள் கிடைக்கலயா? பாம்பும் பெண்ணும்!!
ஒரு வீடியோ தற்போது இன்ஸ்டாகிராமில் வைரல் ஆகி வருகின்றது. இந்த வீடியோவில் ஒரு பெண் மற்றும் ஒரு ஆபத்தான மலைப்பாம்பை காண முடிகின்றது.
Viral Video: சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. இவற்றைக் கண்டு நெட்டிசன்கள் தங்கள் மன அழுத்தங்களை மறந்து ரசித்து சிரிக்கின்றனர்.
இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன. சமீப காலங்களில் பல வித பாம்புகளின் (Snake) வீடியோக்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.
அப்படிப்பட்ட ஒரு வீடியோ தற்போது இன்ஸ்டாகிராமில் வைரல் ஆகி வருகின்றது. இந்த வீடியோவில் ஒரு பெண் மற்றும் ஒரு ஆபத்தான மலைப்பாம்பை காண முடிகின்றது.
இதில், பாம்புடன் அந்த பெண் செய்யும் செயல்களைப் பார்க்கும்போது மிகவும் ஆச்சரியமாக உள்ளது. இந்த வீடியோ இதுவரை பல்வேறு சமூக ஊடக தளங்களில் மில்லியன் கணக்கான முறை பார்க்கப்பட்டுள்ளது.
சில நொடிகளே உள்ள இந்த வைரல் வீடியோவில், சிறுமி தரையில் சாவகாசமாக நின்று கொண்டிருப்பதையும், அவரது கழுத்தில் சுமார் 15 அடி நீளமுள்ள மலைப்பாம்பு இருப்பதையும் காண முடிகின்றது.
ALSO READ: Viral Video: பாம்பு சிரிச்சு பாத்துருக்கீங்களா? இந்த வைரல் வீடியோல பாருங்க!!
மலைப்பாம்பு (Python) என்ற வார்த்தையே பலரது உடலை நடுங்க வைக்கும். ஆனால், அந்த பெண்ணோ, அந்த பாம்புடன் வேடிக்கையாக விளையாடுகிறார். சில சமயம் அந்த பாம்பின் கழுத்தைத் தொட்டும், சில சமயம் அதன் உடலை கையால் வருடியும் அவர் சர்வ சாதாரணமாக அந்த பாம்புடன் விளையாடுகிறார்.
அந்த பாம்பும் அந்த பெண்ணுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பதும் ஒரு ஆச்சரியமான விஷயமாகும். இருவரும் ஒருவர் மீது ஒருவர் மிகுந்த அன்பு வைத்திருப்பது போல் தெரிகிறது.
அந்த கியூட் வீடியோவை இங்கே காணலாம்:
இந்த ஆச்சரியமான வீடியோ, சமூக ஊடக தளமான (Social Media) இன்ஸ்டாகிராமில் royal_pythons என்ற பக்கத்திலும் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர்.
ALSO READ:Watch Viral Video: சிறுவனை சுற்றி வளைத்த மலைப் பாம்பு; நடந்தது என்ன..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR