Watch Viral Video: சிறுவனை சுற்றி வளைத்த மலைப் பாம்பு; நடந்தது என்ன..!!

இணையதளத்தில் தினமும்  லட்சக்கணக்கான வீடியோக்கள் பகிரப்படுகின்றன. இருப்பினும், சில வீடியோக்கள் ஆச்சர்யத்தை அள்ளித் தருகின்றன; சில வீடியோக்கள் திகிலை  உண்டாக்குகின்றன. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 9, 2021, 02:17 PM IST
Watch Viral Video: சிறுவனை சுற்றி வளைத்த மலைப் பாம்பு; நடந்தது என்ன..!! title=

இணையதளத்தில் தினமும்  லட்சக்கணக்கான வீடியோக்கள் பகிரப்படுகின்றன. இருப்பினும், சில வீடியோக்கள் ஆச்சர்யத்தை அள்ளித் தருகின்றன; சில வீடியோக்கள் திகிலை  உண்டாக்குகின்றன. 

அந்த வகையில், திகிலையும் ஆச்சர்யத்தையும் உண்டாக்கும் ஒரு வீடியோ சமூக  வலைதளத்தில் வைரலாகி வருகிறது. சிறுவன் ஒய்யாரமாக சோபாவில் சாய்ந்து கொண்டு மொபைலில் விளையாடிக் கொண்டிருக்கும் போது, ஒரு ராட்சஸ பாம்பு (Python) சோபாவின் மீது ஊர்ந்து செல்வது ஆச்சரியத்தையும் திகிலையும் ஏற்படுத்துகிறது. இந்த வீடியோ பல்வேறு சமூக ஊடக தளங்களில் ஆயிரக்கணக்கான மில்லியன் முறை பார்க்கப்பட்டது மற்றும் நெட்டிசன்களும் அதை மிகவும் விரும்பி பார்த்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றன.

ALSO READ | Watch Viral video: மலைப்பாம்பின் வாயில் சிக்கிய கோழியின் நிலை என்ன..!!

சில வினாடிகளின் வீடியோவில், ஒரு சிறுவன் சோபாவில் வசதியாக வீடியோ கேம் விளையாடுவதைக் காணலாம். அப்போது இருபது அடி நீளமுள்ள ராட்சத பாம்பு ஒன்று அவன் படுத்திருக்கும் சோபாவில் அவனை சுற்றி வளைப்பது போல் உள்ளது. ஆச்சர்யம் என்னவென்றால், பாம்பை தனக்கு மிக அருகில் பார்த்த சிறுவன் சிறிதும் பதறாமல், விளையாட்டில் மும்முரமாக விளையாடிக்கொண்டிருக்கிறான். 

வைரல் வீடியோவை இங்கே காணலாம்: 

ராட்சஸ பாம்பு சிறுவனின் முகத்தின் முன்னால் தலை தூக்கிய போதிலும் அவனிடம் அதிர்ச்சியோ வியப்போ ஏற்படவில்லை. சிறுவன் இதைப் பார்த்து சிறிதும் பயப்படவில்லை. அல்லது சிறுவன் வீடியோ கேமை மும்முரமாக விளையாடியதால், கவனிக்கவில்லையா என்பதும் புரியவில்லை. 

இந்த வீடியோ சமூக ஊடக தளமான Instagram இல் royal_pythons என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.

ALSO READ | பகீர் சம்பவம்! கழிப்பறைக்கு சென்ற நபரின் அந்தரங்க பகுதியை கடித்த பாம்பு..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News