வைரல் வீடியோ: ஒவ்வொரு நாளும் இணையத்தில் பல வீடியோக்கள் வைரல் ஆகின்றன. இவற்றில் சில நம்மை சிரிக்க வைக்கின்றன, சில சிந்திக்க வைக்கின்றன, சில நம்மை நெகிழ வைக்கின்றன. அப்படிப்பட்ட, நெகிழ வைக்கும் ஒரு வீடியோ, இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மோர்கன் அல்டியர் என்பவர், மாற்றுத்திறனாளியான தனது இரட்டை சகோதரி மேசியுடன் தனது வாழ்க்கையின் அனைத்து அழகிய தருணங்களையும் பகிர்ந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


மார்கன் தனது டிக் டாக் கணக்கில், தனது இரட்டை சகோதரி மேசியும், தன்னைப் போலவே ஒரு மணப்பெண்ணாக, அந்த சிறப்பான தருணத்தை அனுபவிக்க வேண்டும் என தான் எண்ணியதாக எழுதினார்.


வீடியோவில் (Video), மணமகன் ஒரு கருப்பு டக்ஸிடோ அணிந்து தனது மணமகளின் சகோதரியை கைகளில் சுமந்து செல்வதைக் காண முடிகிறது. அவருடைய சகோதரியைப் போலவே, அவரும் மணப்பெண்ணுக்கான ஆடையில் காணப்படுகிறார். திருமண விருந்தினர்கள் அவர்களை உற்சாகப்படுத்துகையில், மணமகன் மணமகளின் சகோதரியுடன் படிக்கட்டுகளில் ஏறுகிறார்


"மாற்றுத் திறனாளியான எனது இரட்டை சகோதரி, என் வருங்கால கணவருடன் திருமண (Marriage) மேடைக்கு வந்தார். நான் இதை என்றென்றும் மகிழ்ச்சியுடன் நினைத்துப் பார்ப்பேன்!! அவர் என்னைப் போலவே என் சகோதரியையும் நேசிக்கிறார். இதனால்தான் நான் அவரைக் காதலித்தேன்” என்று அவர் எழுதியுள்ளார்.


ALSO READ: வனவாசமே சுகவாசம்’: 17 ஆண்டுகளாக காட்டில் வசிக்கும் அபூர்வ மனிதர்


இந்த வீடியோவை ஒரு ட்விட்டரில் பயனர் பதிவேற்றியுள்ளார். வீடியோவை இங்கே காணலாம்:



இந்த வீடியோ வைரலாகி (Viral Video) மக்களை உணர்ச்சிவசப்பட வைத்துள்ளது. பகிரப்பட்டதிலிருந்து, வீடியோ 30.8 K வியூஸ்களையும் 600 க்கும் மேற்பட்ட லைக்குகளையும் பெற்றுள்ளது. மணமகனின் அழகிய சைகையை மக்கள் விரும்புகின்றனர். அவரது நல்ல குணத்தை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.


ஒரு பயனர், "மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது! மணமகளின் முகபாவத்தையும் காண முடிந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். என்ன ஒரு சிறப்பான தருணம்” என்று கருத்து தெரிவித்துள்ளார்.


மற்றொருவர், “ உங்கள் திருமணத்திற்கு வாழ்த்துக்கள்! இத்தகைய ஒரு விலைமதிப்பற்ற படத்தை பகிர்ந்தமைக்கு நன்றி! அவர் ஒரு உன்னதமான மனிதர்"  என்று எழுதியுள்ளார்.


மற்றொரு பயனர், "இந்த வீடியோவில் அன்பும் பாசமும் அதிகமாகத் தெரிகிறது” என்று கருத்து தெரிவித்துள்ளார்.


வீடியோவுக்கு வந்த சில கமெண்டுகள் இதோ!!



 




 


ALSO READ: Viral Video: பிபிஇ கிட் அணிந்து கர்பா நடனம், நவராத்திரி விழாவில் கோவிட் விழிப்புணர்வு 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR