Viral Video: மற்றவர்களை துன்புறுத்துவது தவறு! நாயை சீண்டிய நபருக்கு நேர்ந்த கொடுமை
Viral Video: ஒரு கூண்டில் பூட்டப்பட்டு இருந்த நாயை சீண்டிய நபருக்கு ஏற்பட்ட மோசமான விளைவு. இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோ `மற்றவர்களை துன்புறுத்துவது மிகப்பெரியத் தவறு` என்ற பாடத்தை கற்றுத்தருகிறது.
புதுடில்லி: மிகவும் ஆச்சரியமான வீடியோக்கள் சில நேரங்களில் இணையத்தில் வைரலாகி வருவதைக் காணலாம். இதுபோன்ற சில வீடியோக்கள் நம்மை ஆச்சரியப்படுத்தும் விதமாகவும் இருக்கும். மனிதனிடம் நாய்கள் காட்டும் விசுவாசத்தின் காரணமாக பெரும்பாலும் அதனை பாராட்டுகின்றனர். ஆனால் நீங்கள் நாயைத் தொந்தரவு செய்தால், தங்கள் விசுவாசத்தை தள்ளி வைத்துவிட்டு, உங்களுக்கு சரியான பாடம் புகட்டும். யாரையும் துன்புறுத்துவது மிகப்பெரியத் தவறு. இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவும் இதே போன்ற ஒரு பாடத்தை கற்றுத்தருகிறது
ALSO READ | நிர்வாணமாக யோகா செய்து அசத்தும் இளம் பெண்... வைரலாகும் வீடியோ!!
மற்றவர்களை சீண்டினால் என்ன நடக்கும்?
எந்தவொரு மிருகத்தையும் சீண்டுவதால், அதற்கு எவ்வளவு விலை கொடுக்க வேண்டும் என்பதை இந்த நபர் நன்கு புரிந்து கொண்டார். சமூக ஊடகங்களில் வைரலாகி வரும், இந்த வீடியோவை பார்ப்பதன் மூலம், ஒரு நாயை சீண்டுவது மூலம் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ளலாம். அதாவது, ஒரு நபர் ஒரு நாயை சீண்டுகிறார். அந்த நபருக்கு என்ன நடந்தது என்பதையும் இந்த வீடியோவில் பாருங்கள்!
நபரின் கால் நாயின் வாயில் மாற்றிக்கொள்கிறது:
இந்த வைரல் வீடியோவைப் பார்த்த பிறகு நீங்கள் சிரிப்பதை நிறுத்த முடியாது. இந்த வீடியோவில், நாய் கூண்டுக்குள் பூட்டப்பட்டு இதைப் பயன்படுத்திக் கொண்டு, அந்த நபர் காலால் உதைத்து பயமுறுத்தத் தொடங்கினார். இது ஒருமுறை அல்ல, இரண்டு முறை அல்ல, மூன்று நான்கு முறை கூண்டுக்குள் இருக்கும் நாயை சீண்டுகிறார். கடைசியாக, அந்த நபரின் கால் நாயின் வாயில் மாற்றிக்கொள்கிறது. அதன் பிறகு அவர் கத்த ஆரம்பிக்கிறார். இந்த வீடியோவை உருவாக்கியவர் அந்த நபரைக் காப்பாற்றினார். அந்த நபர் பலத்த காயமடைந்துள்ளார் என்பதும், வெறிநாய் நோயைத் தவிர்ப்பதற்கு ஊசி போட வேண்டியிருக்கும் என்பதும் புலப்படுகிறது.
ALSO REAS| Watch: Viral ஆனது Mask போட்டு வாக்கிங் போகும் நாயின் video!!
வைரலாகும் வீடியோ:
இந்த வீடியோவை இந்திய வனசேவை அதிகாரி (ஐ.எஃப்.எஸ்) சுஷாந்த் நந்தா தனது சமூக ஊடக தளமான ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை இதுவரை 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். மேலும் 1600 பேர் இதை லைக் செய்துள்ளனர்.