200 கிலோ மலைப்பாம்பின் வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பொதுவாக விலங்குகளில், சிங்கம், குரங்கு, நாய், பூனை, சிங்கம், பாம்பு, புலி என இந்த மிருகங்களுக்கு இணையத்தில் தனி மவுசு உள்ளது. இவற்றின் வீடியோக்களை மக்கள் மிகவும் விரும்பி பார்க்கிறார்கள். சமீப காலங்களில் பாம்புகளின் வீடியோக்கள் இணையத்தை கலக்கி வருகின்றன. தற்போதும் ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது. அதில், சுமார் 200 கிலோ கொண்ட இரண்டு மலைப்பாம்புகளின் வாலை நபர் ஒருவர் எப்படி பிடிக்கிறார் என்பதை நீங்கள் காணலாம்.


மேலும் படிக்க | Viral Video: பள்ளி வகுப்பறையில் காதலை சொன்ன மாணவன்... மாணவியின் பதிலை பாருங்க!


ஜே ப்ரூவர், ஒரு அமெரிக்க யூடியூபர் மற்றும் ரெப்டைல் ஜூ ப்ரீஹிஸ்டோரிக் இன்க் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார். சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் இவர் ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார், அதில் அவர் இரண்டு பெரிய மலைப்பாம்புகளை வைத்திருப்பதை நாம் காணலாம். வீடியோவில், இரண்டு பெரிய மலைப்பாம்புகள் - ஒரு வெள்ளை மற்றும் ஒரு கருப்பு ஒன்று - ஒன்றுடன் ஒன்று சிக்கக்கொண்டுள்ளதை நாம் காண முடிகிறது.


இந்த வீடியோவை பார்க்கும் போது ஒரு மலைப்பாம்பு எவ்வளவு பெரியதாக இருக்குமா என்று ஆச்சரியப்பட வைக்கிறது.



வைரலாகி வரும் வீடியோவை 3 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பார்த்துள்ளனர், மேலும் 162,000 பேர் இந்த வீடியோவை விரும்பியுள்ளனர். அதிர்ச்சியடைந்த பல இணைய பயனர்கள் இந்த வீடியோவுக்கு பல வித கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.


மேலும் படிக்க | Viral Video: கொல்ல வந்த பாம்பை கெத்தாக தடுத்த பூனை... நொடிக்கும் குறைவான நேரத்தில் ரியாக்சன்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ