Viral Video: கொல்ல வந்த பாம்பை கெத்தாக தடுத்த பூனை... நொடிக்கும் குறைவான நேரத்தில் ரியாக்சன்!

Snake vs Cat Viral Video: பாம்பு ஒன்று தோட்டத்தில் இருந்த பூனையை கொத்தி கொல்ல முயன்றபோது, அதனை பூனை படுவேகமாக தடுத்து தற்காத்துக்கொண்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Written by - Sudharsan G | Last Updated : Mar 15, 2023, 07:31 PM IST
  • இந்த வைரல் வீடியோவிற்கு பின் இருக்கும் அறிவியல் உண்மையைும் இதில் காணலாம்.
  • பாம்பை விட பூனை அதிக ரியாக்சன் டைமை கொண்டுள்ளது.
Viral Video: கொல்ல வந்த பாம்பை கெத்தாக தடுத்த பூனை... நொடிக்கும் குறைவான நேரத்தில் ரியாக்சன்! title=

Snake vs Cat Viral Video: ஒரு ஆபத்து உங்களுக்கு நேர்கிறது என்றால், உங்களின் மூளையும், உடலும் மிக மிக வேகமாக செயல்பட்டு, சில மணித்துளிகளில் சிந்தித்து அதில் இருந்து உங்களை தற்காத்துக்கொள்ளும். உதாரணத்திற்கு, சாலையில் போகும்போது, எதிரில் லாரி ஒன்று திடீரென வேகமாக உங்களை நோக்கி வந்தால், நீங்கள் உங்களை அறியமாலேயை அதிலிருந்து தப்பிக்க மாற்று திசையில் வண்டியை திருப்பி உயிரிழைக்க முயற்சிப்பீர்கள். இவை அனைத்தும் ஒரு சில நொடிகளில் நடந்தேறும். உங்களுக்கு இது ஆச்சிரியத்தை அளிக்கும். 

ரியாக்சன் டைம்

ஆனால், இதில் ஆச்சர்யப்பட ஒன்றுமே இல்லை. மனித நரம்பு மண்டலம் வெளிப்புற தூண்டுதல்களை செயலாக்குவதற்கும் பதிலளிப்பதற்கும் பொறுப்பாகும். ஒளி அல்லது ஒலி போன்ற ஒரு தூண்டுதல் கண்டறியப்பட்டால், உணர்ச்சி நியூரான்கள் மூளைக்கு சமிக்ஞைகளை அனுப்புகின்றன. மூளை பின்னர் தகவலைச் செயலாக்குகிறது மற்றும் பதிலளிக்கும் வகையில் பொருத்தமான தசைகளுக்கு ஒரு சமிக்ஞையை அனுப்புகிறது.

இந்த செயல்முறை நிகழ எடுக்கும் நேரம் ரியாக்சன் டைம் என்று அழைக்கப்படுகிறது. நரம்பு மண்டலம் எவ்வளவு விரைவாக தகவலைச் செயலாக்குகிறது மற்றும் தசைகளுக்கு ஒரு சமிக்ஞையை அனுப்ப முடியும் என்பது வேகமாக ரியாக்சன் டைமாகும். இதுவே அறிவியல் பூர்வமானது. 

மேலும் படிக்க | வேட்டையாட வந்த பாம்பு, காத்திருந்த ட்விஸ்ட்: பூனையின் வெறியாட்டம், வைரல் வீடியோ

வைரல் வீடியோ

இது மனிதர்களுக்கு மட்டுமின்றி, விலங்குகளுக்கும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, ஒரு மான் காட்டில் மேய்ந்துகொண்டிருக்கையில், திடீரென அருகில் இருக்கும் இருந்து புதரில் இருந்து புலி ஒன்று பாயும்போது, அந்த மான் ஒரு நொடிக்கும் குறைவான மணித்துளிகளில் அதில் இருந்து தப்பிக்க ஓட்டம் எடுக்கும். இதுவே, ரியாக்சன் டைமாகும். 

அந்த வகையில், தற்போது வைரலாகி வரும் வீடியோவில் இந்த ரியாக்சன் டைம் அதிசயம் மீண்டும் வியக்க வைக்கிறது. பூனை, பாம்பு இந்த இரண்டில், எது விரைவாக செயல்படும் என கேட்டால் எல்லோரும் பாம்பு என்றுதான் சொல்வார்கள். ஆனால், இங்கே நிலைமை தலைகீழ்.

ஒரே தோட்டம் போன்ற இடத்தில், பூனை ஒன்றை பாம்பு தாக்க முற்படும்போது, அந்த பூனை அதில் இருந்து நொடிக்கும் குறைவாக நேரத்தில் தற்காத்து கொள்கிறது. இந்த வீடியோதான் தற்போது வைரலாகி வருகிறது. அந்த பாம்பு, இரண்டு மூன்று தாக்க முற்பட்டாலும், அந்த பூனை துல்லியமாக அதை தள்ளிவிட்டு, தனது உயிரை காப்பாற்றிக்கொள்கிறது.

வைரலாகும் அந்த வீடியோவின் ட்வீட் படி, சராசரி பூனையின் ரியாக்சன் டைம் தோராயமாக 20-70 மில்லி விநாடிகள் ஆகும். அதே நேரத்தில் சராசரி பாம்பின் ரியாக்சன் டைம் 44-70 மில்லி விநாடிகள் ஆகும். இருப்பினும், இவை சராசரிகள் மற்றும் தனிப்பட்ட பூனைகள், பாம்புகள் வேகமான அல்லது மெதுவான ரியாக்சன் டைம்மை கொண்டிருக்கலாம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பாம்பும் பூனையும்

பூனைகள் அவற்றின் விரைவான அனிச்சை மற்றும் சுறுசுறுப்புக்காக அறியப்படுகின்றன, இது அவற்றை சிறந்த வேட்டையாடும் மிருகமாக்குகிறது. அவர்கள் தங்கள் இரையை விரைவாக பாய்ந்து தங்கள் கூர்மையான நகங்களால் பிடிக்க முடியும். இந்த திறன் அவர்களின் வேகமான ரியாக்சன் டைமின் காரணமாக உள்ளது, இது திடீர் அசைவுகளுக்கு விரைவாக பதிலளிக்க அனுமதிக்கிறது.

மறுபுறம், பாம்புகள் அவற்றின் விரைவான அனிச்சைகளுக்கும் பெயர் பெற்றவை. அவற்றின் வேகமான ரியாக்சன் டைம் மூலம், மின்னல் வேகத்தில் அவை இரையைத் தாக்க முடிகிறது. பாம்புகள் மிகவும் சிறப்பு வாய்ந்த நரம்பு மண்டலங்களைக் கொண்டுள்ளன. அவை அதிர்வுகளையும் வெப்பநிலை மாற்றங்களையும் உணர அனுமதிக்கின்றன. அவை இரையைக் கண்டறிந்து விரைவாக தாக்க உதவுகின்றன.

மேலும் படிக்க | சமூக வலைதளத்தையே அதிர வைத்த பாம்பு! மரத்தில் ஏறிய வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News