Viral Video: கிஸ் பண்ண போய் மிஸ் ஆன நட்பு: குரங்கு, கிளியின் கியூட் வீடியோ
இந்த வீடியோ பகிரப்பட்ட சில மணி நேரங்களிலேயே ஒரு லட்சத்துக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவை ஆயிரக்கணக்கானோர் லைக் செய்துள்ளனர்.
Viral Video: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.
இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன.
சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. இவற்றைக் கண்டு நெட்டிசன்கள் தங்கள் மன அழுத்தங்களை மறந்து ரசித்து சிரிக்கின்றனர். சமீப காலங்களில் விலங்குகளுக்கு இடையில் நடக்கும் வேடிக்கையான வீடியோக்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.
அப்படிப்பட்ட ஒரு வீடியோ தற்போது வைரல் (Viral Video) ஆகி வருகிறது. இந்த வீடியோ ஒரு அழகான குரங்கு மற்றும் கிளி பற்றியது. இதில் குரங்கும் கிளியும் செய்யும் கியூட்டான செயல்கள் நம்மை மீண்டும் மீண்டும் வீடியோவை பார்க்க வைக்கின்றன.
இந்த வீடியோ பகிரப்பட்ட சில மணி நேரங்களிலேயே இது ஒரு லட்சத்துக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவை ஆயிரக்கணக்கானோர் லைக் செய்துள்ளனர்.
சில விநாடிகளே கொண்ட இந்த வீடியோவில், ஒரு அறையில் ஒருவர் தனது மடியில், ஒரு குரங்கையும் (Monkey) கிளியையும் வைத்துக்கொண்டு அமர்ந்திருப்பதைக் காண முடிகின்றது. தனது எதிரில் அழகான கிளி அமர்ந்திருப்பதைப் பார்த்த குரங்கு, அதற்கு முத்தம் கொடுக்க முயல்கிறது.
ஆனால், முத்தம் குடுக்கும் முயற்சியில் வெற்றி கிடைக்காததால், குரங்கு கோபமடைந்து கிளியை (Parrot) கையால் அறைந்து விடுகிறது. சில நொடிகளில் குரங்கு பல முறை கிளியை அடித்து விடுகிறது.
வீடியோவில் இதற்குப் பிறகு வரும் காட்சி மிகவும் வேடிக்கையாக உள்ளது. கிளியும் குரங்கின் குறும்புகளால் கோபமடைந்து, பதிலுக்கு அதைக் குத்த ஆரம்பித்தது.
அந்த கியூட்டான வீடியோவை இங்கே காணலாம்:
ஹெலிகாப்டர்_யாத்ரா_ என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவுக்கு ஆறாயிரத்திற்கும் அதிகமான லைக்குகள் கிடைத்துள்ளன. பயனர்கள் இதற்கு விதவிதமான கமெண்டுகளையும் அள்ளி வீசி வருகின்றனர்.
ALSO READ:Viral News: அனைவரையும் கவர்ந்த ₹1 கோடி மதிப்பிலான 'ஹள்ளிகார்' காளை..!!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR