Viral Video: பிடுங்கி பிடுங்கி விளையாடுவோமா? குரங்கும் குழந்தையும், கியூட் வைரல் வீடியோ

முகத்தை பிரகாசமாக்கும் இந்த வீடியோ இணைய வாசிகளைக் கவர்ந்து வருகிறது. இந்த வீடியோவில் ஒரு சிறுமியும் ஒரு குரங்கும் மொபைல் போனுக்காக சண்டையிடுவதைக் காணலாம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 12, 2021, 02:56 PM IST
  • சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன.
  • தற்போது வைரல் ஆகியுள்ள இந்த வீடியோவைப் பார்த்து புன்னகை பூக்காமல் இருக்க முடியாது.
  • ஒரு குரங்கும் ஒரு குழந்தையும் இருக்கும் இந்த வீடியோ மிகவும் கியூட்டாக உள்ளது.
Viral Video: பிடுங்கி பிடுங்கி விளையாடுவோமா? குரங்கும் குழந்தையும், கியூட் வைரல் வீடியோ  title=

Viral Video: சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. இவற்றைக் கண்டு நெட்டிசன்கள் தங்கள் மன அழுத்தங்களை மறந்து ரசித்து சிரிக்கின்றனர். 

சமீப காலங்களில் பல வித விலங்குகளின் (Animal Video) வீடியோக்கள் இணையத்தை கலக்கி வருகின்றன. இணைய உலகம் மிகவும் வேடிக்கையானது. நிஜ வாழ்க்கையில் நாம் கண்ணால் காண முடியாத பல விஷயங்களை இங்கே மிக எளிதாக கண்டு விடலாம்.

இப்படி நாம் காணும் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன.

அப்படிப்பட்ட ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. இந்த வீடியோவில் ஒரு குரங்குக்கும் ஒரு பெண் குழந்தைக்கும் இடையில் நடக்கும் ஒரு வேடிக்கையான சம்பவத்தைக் காண முடிகின்றது. இதைக் கண்டால் யாராலும் மகிழ்சியடையாமலோ, சிரிக்காமலோ இருக்க முடியாது.

முகத்தை பிரகாசமாக்கும் இந்த வீடியோ இணைய வாசிகளைக் கவர்ந்து வருகிறது. இந்த வீடியோவில் ஒரு சிறுமியும் ஒரு குரங்கும் மொபைல் போனுக்காக சண்டையிடுவதைக் காணலாம்.

இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோவில் (Video), ஒரு சிறு பெண் குழந்தை ஒரு கட்டிலில் அமர்ந்து ஸ்மார்ட்போனைப் பார்ப்பதைக் காண்கிறோம். அப்போது ஒரு குரங்கு அந்த குழந்தையின் அருகில் வருகிறது. பின்னர், அக்குரங்கு குழந்தையிடமிருந்து தொலைபேசியைப் பறிக்கிறது.

குழந்தை அதை உடனடியாக குரங்கிடமிருந்து மீண்டும் பறித்துக்கொள்கிறது. குழப்பமடைந்த குரங்கு மீண்டும் எந்த போனை குழந்தையிடமிருந்து பிடுங்கி அதை இறுக்கமாக பிடித்துக் கொள்கிறது.

இந்த கியூட்டான வீடியோவை இங்கே காணலாம்:

ALSO READ:Viral Video: உணவாக வந்த எலியை உறவாக்கிய பாம்பு: பாராட்டி மகிழும் ரசிகர்கள் 

அதிர்ஷ்டவசமாக அந்த குறும்புக்கார குரங்கு (Monkey) குழந்தைக்கு எந்த பாதகத்தையும் விளைவிக்கவில்லை. அது போனிலேயே அதன் கவனத்தை வைத்துள்ளது. வீடியோவின் முடிவில், குரங்கு தான் நினைத்ததைப் போலவே போனை தன் வசம் வைத்திருப்பதைக் காண முடிகின்றது.

இந்த வேடிக்கையான வீடியோவை இணைய வாசிகள் விரும்பி பார்த்து வருகிறார்கள். நெட்டிசன்கள் பல வித கமெண்டுகளையும், எமோஜிக்களையும் அள்ளி வீசி வருகின்றனர்.

மொபைல் போன் குழந்தைகளுக்கான விஷயம் அல்ல என அந்த குரங்கு ஒரு நல்ல செய்தியை அனுப்பியுள்ளதாக ஒரு பயனர் கமெண்ட் செய்துள்ளார்.

மற்றொரு பயனர், ‘இந்த வீடியோ மிகவும் வேடிக்கையாகவும் அழகாகவும் உள்ளது’ என எழுதியுள்ளார்.

இந்த இடுகையை மில்லியன் கணக்கான பயனர்கள் பார்த்துள்ளனர். மேலும் இந்த வீடியோவுக்கு சுமார் 1.43 லட்சம் லைக்குகள் கிடைத்துள்ளன.

ALSO READ:Viral Video: டேய் ஓடாத, நில்லு.. வடிவேலு ஸ்டைலில் மாஸ் காட்டும் கோழி, ஓட்டம்பிடித்த சிறுவன்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News