கேரளாவில் 3 வயது மதிக்கத்தக்க ஆண் யானை மின்வேலியில் சிக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் அனைவரையும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில் மின்வேலியில் சிக்கி 3 வயது மதிக்கத்தக்க ஆண் யானை (Elephant)பலியானது. உயிரிழந்த யானையை அதன் தாய் யானை தும்பிக்கையால் எழுப்ப முயலும் காட்சி பார்ப்போரை கண் கலங்கச் செய்துள்ளது.
கேரளா தமிழகம் ஒட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உலா வருவது வழக்கம். குறிப்பாக தமிழக (Tamil Nadu) கேரள எல்லையை பிரிக்கும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் உணவுக்காகவும் குடிநீருக்காகவும் மக்கள் வசிக்கும் குடியிருப்பு மற்றும் ஊர் பகுதிகளுக்குள் வரும் காட்டு யானைகள் ரயிலில் அடிபட்டு இறப்பதும், பள்ளங்களில் விழுந்தும், மின் வேலியில் சிக்கி உயிரிழப்பது தொடர் கதையாகி வருகிறது.
இந்நிலையில் இன்று கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மலம்புழா அணை அருகில் உள்ள தனியாருக்கு சொந்தமான நிலத்தை கடக்க முயன்ற மூன்று வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் யானை அங்கு அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தது.
ALSO READ: கூடலூர் யானைகளை காட்டிற்குள் விரட்ட கோரி தமிழக - கேரள சாலையில் மறியல்!
இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதைத்தொடர்ந்து அப்பகுதிக்கு வந்த வனத்துறையினர் யானையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த தாய் யானை உயிரிழந்த குட்டி யானையை தன் தும்பிக்கையால் தட்டி தடவி எழுப்பும் முயற்சியில் ஈடுபட்ட வீடியோ தற்போது வைரல் (Viral Video) ஆகி வருகிறது.
மின் வேலியில் சிக்கி பலியான 3 வயது ஆண் யானை... தவியாய் தவிக்கும் தாய் யானை!! மனதை உருக்கும் வீடியோ!! #Elephant | #Kerala | #ViralVideo | #ZeeNewsTamil pic.twitter.com/Bi12VE2C99
— Zee Hindustan Tamil (@ZHindustanTamil) November 17, 2021
நீண்ட நேரம் யானைக்குட்டியை எழுப்ப முயன்ற தாய் யானை பின்னர் அங்கிருந்து சென்றது. அதைத் தொடர்ந்து வனத்துறையினர் மற்றும் வனகால்நடை மருத்துவர்கள் உடற்கூறு ஆய்வு பணியை மேற்கொண்டனர்.
உயிரிழந்த காட்டு யானையை தாய் யானை எழுப்ப முயலும் காட்சி காண்போரின் கண்களை கலங்க வைக்கிறது.
ALSO READ:கோவையில் இறந்த யானையின் தந்தத்தை வெட்டி விற்க முயன்ற 3 பேர் கைது
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR