புலி சிங்கம் போன்ற வேட்டை விலங்குகள் தங்களை விட பலவீனமான விலங்குகளை எளிதில்  வேட்டையாடி வயிற்றை நிரப்புவதை நீங்கள் பலமுறை பார்த்திருப்பீர்கள். இங்கேயும் சிங்கங்கள் கூடி எருமையை வேட்டையாடுவதை காணலாம். ஆனால், வேட்டைக்குப் பிறகு சிங்கங்கள் இடையே  சண்டை ஏற்பட்டால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். கண்டிப்பாக இது சற்று எதிர்பாராத அதிர்ச்சி தரும் காட்சியாக இருக்கும். பல சிங்கங்கள் ஒன்றாக அமர்ந்து அவற்றிற்கு அருகில் இரை கிடக்கும் எருமையை தாக்குவது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இந்நிலையில், பெண் சிங்கங்களுக்கும் ஆண் சிங்கங்களுக்கும் இடையே சண்டை மூண்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுவரை மனிதர்களுக்குள்  தான் குடும்ப சண்டை வந்து பார்த்திருப்போம். ஆனால், விலங்குகளும் இதில் விதிவிலக்கலா. இந்த வீடியோவில், சிங்கங்களின் இடயே சண்டை மூண்டதும் அடுத்த கணம் அவை, வேட்டையை பார்க்காமால், பரஸ்ப்ரம் மோதுவதை நீங்கள் காணலாம். 


வேட்டை வீடியோவை இங்கே காணலாம்:


 



 


சிங்கங்கள் இடையே மூண்ட சண்டையினால், புத்திசாலி எருமை தப்பிக்கிறது.  இதிலிருந்து ஒற்றுமை இல்லை என்றால், எவ்வளவு வலிமையான விலங்காக இருந்தால் பின்னடைவு தான் என்பதை அறிந்து கொள்ளலாம். இது மனிதர்களுக்கும் பொருந்தும் என்றால் மிகையில்லை. இந்த வீடியோ @OTerrifying என்ற ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. சில நொடிகள் கொண்ட இந்த வீடியோ இதுவரை 4.5 மில்லியனுக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளையும் அளித்து வருகிறார்கள். வீடியோவை பலர் லைக் செய்துள்ளனர்.


மேலும் படிக்க | ஆட்டமா தேரோட்டமா... இது மயிலின் மயக்கும் ஆட்டம்... சொக்க வைக்கும் அற்புத வீடியோ! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ