இணையத்தில் தினமும் எண்ணிலடங்கா விடியோக்கள் பகிரப்பட்டாலும், சில வீடியோக்கள் தான் மிகவும் வைரலாகின்றன. பாம்பு என்றால் படையே நடுங்கும் என்றாலும், பாம்பு வீடியோக்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது எனலாம். சமூக ஊடகத்தில் பகிரப்படும் வீடியோக்கள் சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. நேரில் பார்க்க முடியாத காட்சிகளை பார்ப்பதில் மக்களுக்கு எப்போதுமே ஆர்வம் அதிகம் இருக்கும். தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இது பாம்பின் வீடியோ தான் என்றாலும், இது பயங்கரமான வீடியோ அல்ல.  சிரிப்பை வரவழைக்கும் வீடியோ. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தவளை ஒன்று பாம்பின் மீது ஒய்யாரமாக சவாரி செய்கிறது. இது மிகவும் ஆச்சர்யமான காட்சி தான். வெளிர் மஞ்சள் நிற பாம்பு மீது தவளை ஒன்று ஒய்யாரமாக அமர்ந்து சவாரி செய்கிறது. இந்த வீடியோ இணையத்தில் நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஏன் என்றால், தவளை பாம்பிற்கு பிடித்த இரை என்பதால் இந்த விஷயம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.


வைரலாகும் வீடியோவை கீழே காணலாம்:


 



 


மேலும்  படிக்க |   கடவுள் இருக்கான் குமாரு... முட்டையை அபேஸ் செய்த பாம்பிற்கு ஏற்பட்ட கதி!


சமீபத்தில் சில நாட்களுக்கு முன், தவளை  ஒன்று பாம்பை கபளீகரம் செய்யும் வீடியோ ஒன்றும் வைரலானது. சுமார் 2 நிமிடங்கள் நீடித்த அந்த வீடியோ ஒரு திரில்லர் படம் பார்ப்பதைப் போல் இருந்தது. இந்த வீடியோவில் தவளை மெதுவாக பாம்பை ரசித்து ருசித்து பாம்பை கொஞ்சம் கொஞ்சமாக விழுங்குவதைக் காணலாம். பொதுவாக, பாம்பு என்றால் படையே நடுங்கும். பாம்பின் பெயரை கேட்டால் நூறு காத தூரம் ஓடும் மனிதர்கள் பலரை நாம் பார்த்திருப்போம். ஆனால், இங்கே தவளை ஒன்று பாம்பை சர்வசாதாரணமாக விழுங்குவதை பார்த்தால் நிச்சயம் நீங்கள் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள். இந்த வீடியோவை கீழே உள்ள இணைப்பில் காணலாம். 


மேலும்  படிக்க |  கலிகாலம் தான்... நூடுல்ஸ் போல் பாம்பை உயிருடன் கபளீகரம் செய்யும் தவளை... திகிலூட்டும் வீடியோ!


(இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ