பட்டப்பகலில் ரயில் நிலையத்தில் படுத்துக்கொண்டு இந்த பெண் செய்த வேலையை பாருங்க!

ஒரு இளம் பெண் ரயில் நிலையத்தில் படுத்துக்கொண்டு நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பல ஆயிரம் கிலோ மீட்டர்களை கொண்ட இந்த உலகை, நம் கையில் இருக்கும் சிறிய கை பேசி தற்போது நமக்கு மிக நெருக்கமாக கொண்டு வந்து விட்டது. சமூக வலைதளங்களால் பல வீடியோக்கள் அவ்வப்போது வைரலாவது வழக்கம். இப்படி வைரலாகவும் வீடியோக்களால் பலர் பயனடைகின்றனர். இருப்பினும் சமூக வலைதளங்களில் மனதை பாதிக்கும் அல்லது மனதை நெருடும் வகையில் பல வீடியோக்களையோ அல்லது போட்டோக்களையோ பார்க்க நேரிடும். அதில் ஒரு சில வீடியோக்கள், “என்னடா பன்னி வச்சிருக்கீங்க..?” என்று கோமாளி படத்தில் ஜெயம் ரவி கேட்பது போல நம்மையும் கேட்க வைக்கும். அப்படிப்பட்ட வீடியோ ஒன்றுதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க | 18 அடி பாம்பா இருந்தாலும், முதலையை அப்படியே முழுங்கினா செரிமானம் ஆகாது! வைரல் வீடியோ
ரயில் நிலையத்தில் படுத்துக்கொண்டு நடனமாடிய பெண்..
சமூக ஊடகங்களின் நட்சத்திரமாக ஜொலிக்க வேண்டும் என்பதற்காக பலர் இல்லாத வித்தைகளையெல்லாம் காட்டி வருகின்றனர். அப்படி, சமீபத்தில் மும்பையில் நடந்த ஒரு சம்பவம் நெட்டிசன்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஒரு பெண் நெரிசலான ரயில்வே பிளாட்பாரத்தில் நடனமாடுகிறார். பார்ப்பதற்க்கு காமெடியாக இருந்தாலும், இப்படம் பார்வையாளர்களிடமிருந்து கலவையான கமெண்டுகளை பெற்று வருகிறது.
இந்த வித்தியாசமான நடனத்தை டிவிட்டரில் mumbaimatterz என்ற கணக்கில் இருந்து பதிவிடப்பட்டுள்ளது. மும்பை மாநகரம் எவ்வளவு கூட்டம் நிறைந்த இடம் என்பது அனைவருக்கும் தெரியும். அதிலும் ரயில் நிலையம் குறித்து கேட்கவே வேண்டாம். இந்த வீடியோவின் ஆரம்பத்தில் அந்த பெண் கூட்டத்திற்கு நடுவே முதலில் நடந்து கொண்டே நடனமாடுகிறார். பின்பு, என்ன நினைத்தாரோ தெரியவில்லை படுத்துக்கொண்டு மீண்டும் நடனமாடுகிறார். இவரை சுற்றி இருப்பவர்கள் திருதிருவென முழிக்கின்றனர். இந்த வீடியோவை லைவாக பலர் பார்க்க, இணையத்தில் 46ஆயிரம் பேருக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். ஒரு சிலர் இந்த வீடியோவில் ஆடும் பெண்ணை பழிக்க, ஒரு சிலர் அவரது தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் பாராட்டி வருகின்றனர்.
ஒரு சில நெட்டிசன்கள் இந்த பெண்ணை ‘க்ரிஞ்’ என்றும், ‘என்ன எழவுடா இது..’ என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர். ஆனாலும் இந்த வீடியாேவை ரீ-ஷேர் செய்ய யாரும் தவறவில்லை.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ