ட்விட்டரை வாங்கிய எலோன் மஸ்க் சமீபத்தில் ட்விட்டரில் ப்ளூ டிக் பெற இனி பணம் செலுத்த வேண்டும் என்று அறிவித்தார். இது அனைவருக்கும் அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியது. தற்போது இந்த முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. யார் வேண்டுமானாலும் 8$ பணம் செலுத்தி ட்விட்டரில் ப்ளூ டிக் பெற்று கொள்ளலாம். இந்த புதிய அம்சமானது, ஏற்கனவே ப்ளூ டிக் வாங்கியவர்களையும் பணம் கொடுத்து ப்ளூ டிக் வாங்கியவர்களையும் வேறு படுத்தி காட்டுகிறது. நீங்கள் பணம் கொடுத்து ப்ளூ டிக் வாங்கி உள்ளீர்களா? அல்லது ஏற்கனவே ப்ளூ டிக் பெற்றவரா என்பது உங்கள் புரபைலுக்கு கீழே காட்டும்.
welcome to the new blue tick Twitter. There are now two blue ticks, so you can tell who’s paying $8 or not pic.twitter.com/ALzMSRrztq
— Tom Warren (@tomwarren) November 9, 2022
பணம் செலுத்தி ப்ளூ டிக் வாங்கும் வசதி தற்போது iOS பயன்படுத்தும் சில நாடுகளில் உள்ளவர்களுக்கு மட்டுமே அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நவம்பர் 9, 2022 பிறகு உருவாக்கப்பட்ட எந்த ட்விட்டர் கணக்குகளும் இப்போதைக்கு ட்விட்டர் ப்ளூவுக்குத் தகுதிபெறாது. Twitter Blue ஆனது அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் UK ஆகிய சில பிராந்தியங்களில் மட்டுமே தற்போது கிடைக்கிறது. வேறொரு நாட்டில் வசிப்பவராக இருந்தால், சிறிது நாட்கள் இந்த வசதி இருக்காது.
sure it's just an oversight, but the system of lords and peasants will persist until all of these status markers are changed pic.twitter.com/eqKyZ5ePPC
— Mike Solana (@micsolana) November 10, 2022
இதன் மூலம் ட்விட்டரில் ப்ளூ டிக் வாங்கி தருவதாக நடைபெறும் மோசடிகளை தடுக்க முடியும் என்று கூறுகின்றனர். ட்விட்டரில் ப்ளூ டிக் பெற்றவர்களுக்கு சில கூடுதல் வசதிகளை கொடுக்க உள்ளது ட்விட்டர். நீண்ட வீடியோக்களை பதிவிடுதல், அதன் மூலம் வருமானம் பெறுதல், தேடுதலில் முதலில் காண்பிப்பது போன்ற வசதிகளை தர உள்ளது. பணம் செலுத்தி ப்ளூ டிக் பெற ட்விட்டர் ப்ளூ என்ற வசதிக்கு சென்று உங்கள் அக்கவுன்ட் பெயரை உள்ளிட்டு 8$ பணம் செலுத்தினால் ப்ளூ டிக் கிடைக்கும்.
மேலும் படிக்க | பான் கார்டு & பே ஸ்லிப் இல்லாமல் தனிநபர் கடன் பெறுவது எப்படி?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ