பாம்புகள் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. பாம்பு சிறியதாக இருந்தாலும் சரி, பெரியதாக இருந்தாலும் சரி, பொதுவாக மக்கள் அதைப் பார்த்தாலே அலறி ஓடுபவர்களாகத் தான் இருபபர்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால் நம்பவே கடினமாக இருக்கும் வகையில் பாம்புகளுடன் விளையாடுபவர்களும் உண்டு. ஒரு ராஜ நாகப்பாம்பின் வீடியோ இப்போது சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளது. அதில் ஒரு திறந்த பூங்காவில் சிறுமி ராஜ நாகத்தை முத்தமிடுவதைக் காணலாம்.


இந்த வீடியோவில், வனப்பகுதியில் சுமார் 8 அடி  நீளமுள்ள ராஜ நாகம்  படம் எடுப்பதைக் காணலாம். சிறிது நேரம் கழித்து ஒரு பெண் அங்கு வந்து பதற்றமின்றி பாம்பின் அருகில் சென்றாள். அதைக் கண்டதும் பாம்பை முத்தமிடத் தொடங்குகிறாள். பெண் இதை ஒருமுறை அல்ல மீண்டும் மீண்டும் செய்கிறாள். பாம்பு கூட பெண்ணுக்கு எந்தத் தீங்கும் செய்யாமல் இருக்கிறது. வீடியோவைப் பார்த்ததும் இருவருக்கும் இடையே நெருங்கிய நட்பு இருக்கும் போல் தெரிகிறது.


மேலும் படிக்க |  Viral Video: 'காதலை' வெல்ல இரு ராஜநாகங்களுக்கு இடையில் நடக்கும் கடுமையான போர்!


வீடியோவை இங்கே காணலாம்:



காணொளியில் காணப்படுகின்ற மாதிரியான காட்சி இது வரை எவரும் பார்த்திராத வகையில் உள்ளது. ராஜ நாகப்பாம்பை ஆபத்தான முறையில் முத்தமிடும் சிறுமியின் இந்த வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ rasal_viper என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை ஆயிரக்கணக்கான பார்வைகளையும் லைக்குகளையும் பெற்றுள்ளது.


மேலும் படிக்க | Cobra Video: பின்னி பிணையும் நாக பாம்புகள்; இது காதலா இல்லை ஊடலா


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR