Cobra Viral Video: இணைய உலகில், தினம் தினம், நகைச்சுவை, நடனம், வேடிக்கையான நிகழ்வுகள் போன்ற வீடியோக்கள் பகிரப்பட்டாலும், பாம்பு வீடியோக்கள் தான் எளிதில் வைரலாகும். பாம்பு என்றாலே படையும் நடுங்கும். இருப்பினும், பாம்பு வீடியோக்கள் தான் இணையத்தில் அதிகம் பார்க்கப்படும் வீடியோவாக உள்ளது. இவை சில சுவாரஸ்யமாகவும் சில சமயம் திகிலாக இருப்பதால் மக்கள் அதிக அளவில் இதனை பார்க்க விரும்புகிறார்கள்.
தற்போது இணையத்தில். இரண்டு நாகப்பாம்புகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து சுழன்று சுழன்று நடனமாடுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவில், இரண்டு பாம்புகள் அழகாக மெதுவாக தபின்னிப் பிணைவதைக் காணலாம்.
மேலும் படிக்க | Viral Video: மரணம் நெருங்குவதை அறியாமல் பாம்பிடம் சிக்கி பலியான எலி
இந்த வீடியோ @snake_unity என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் நேற்று பகிர்ந்துள்ள நிலையில், மிக விரைவாக வைரலாகி வருகிறது. பல சமூக ஊடக பயனர்கள் இது ஒரு அற்புதமான காட்சி என்று கருத்து தெரிவித்துள்ள நிலையில், சிலர் இந்த பாம்புகள் நடனமாடவில்லை, இவை இனச்சேர்க்கையில் ஈடுபட்டுள்ளது என கருத்து தெரிவித்துள்ளனர்.ஆனால் சிலர் இவை சண்டையில் ஈடுபட்டுள்ளதாக கூறுகின்றனர்
நாகப் பாம்பின் நடன வீடியோவை இங்கே காணலாம்:
இந்த வீடியோ வைரலாகி 18,000க்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. இந்த வீடியோ, இரண்டு பாம்புகளும் இனச்சேர்க்கையில் ஈடுபட்டுள்ளதா, அல்லது நடனத்தில் ஈடுபட்டதா அல்லது சண்டை போடுகிறதா என நெட்டிசன்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
பாம்புகள் "இனச்சேர்க்கை நடனத்தில்" ஈடுபடும் இந்த வீடியோ உண்மையில் ஒரே இனத்தைச் சேர்ந்த இரண்டு ஆண் பாம்புகளுக்கு இடையிலான மல்யுத்தப் போட்டி என்று பலர் தெரிவித்தனர்.
மேலும் படிக்க | நாகப்பாம்பை குளிப்பாட்டி குஷிப்படுத்திய நபர்: அதிசய வைக்கும் வைரல் வீடியோ
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR