இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம். இணையத்தில் நாம் காணும் எண்ணிலடங்காத வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. அதிலும் பாம்பு வீடியோக்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு எனலாம். பாம்புகளின் வீடியோக்களை இணையவாசிகள் மிகவும் விரும்பி பார்ப்பதால் தொடர்ந்து விதவிதமான பாம்பு வீடியோக்கள் பதிவிடப்பட்டு வருகின்றன. உலகில் லட்சக்கணக்கான பாம்புகள் இருந்தாலும், அவற்றில் சில மிகவும் நச்சுத்தன்மை கொண்டவை. பாம்பு என்ற வார்த்தையைக் கேட்டாலே வெலவெலத்துப் போகும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாம்பை நினைத்தாலே முதலில் வரும் வார்த்தை பயம் தான். பொதுவாக பாம்புகளை கண்டால் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று அங்கிருந்து ஓடி விடுவார்கள். ஆனால், நமக்கு அச்சத்தை கொடுக்கும் பாம்புகளை அருகாமையில் பார்க்க சமூக வலைத்தள வீடியோக்கள் உதவுகின்றன. பாம்புகள் தொடர்பான பல வித வித்தியாசமான விஷயங்களையும், உண்மைகளையும் நாம் இந்த வீடியோக்களில் பார்க்கிறோம். சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன என்றாலும் சமீப காலங்களில்  குறிப்பாக பாம்பு வீடியோ எளிதில் வைரலாகிறது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது. 


மேலும் படிக்க | 'தம்பி...போய் ஓரமா நில்லு': சீண்டிய காண்டாமிருகத்தை வெச்சி செஞ்ச யானை, வைரல் வீடியோ


வைரலாகும் வீடியோவைக் கீழே காணலாம்:




சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் ஒரு நபர், மிகப் பெரிய நாகப்பாம்பை அசால்டாக கையாளும் வீடியோ மிகவும் வியப்பைக் கொடுக்கிறது.  அந்த நபர் அதனை ஒரு விளையாட்டுப் பொருளாகவே கருதுகிறார் போலும். அல்லது அதனை தனது செல்ல பிராணியாக நினைக்கிறார் போலும். நாகப் பாம்பை அசால்டாக கையாளும் அவரது செயல்களைப் பார்க்கும்போது மிகவும் ஆச்சரியமாக உள்ளது. world_of_snakes_ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. 


மேலும் படிக்க | Dolphin Viral Video: வானவில்லைத் தொடும் டால்பினின் ஹை ஜம்பிங் வீடியோ வைரல்


மேலும் படிக்க | Viral Video: இதெல்லாம் ரொம்ப ஓவர்! யானை மரத்தை சாய்த்த காரணம் தெரியுமா!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ