Viral Video: கீரியின் கொடூரமான தாக்குதலில் சிக்கி சின்னாபின்னமான நாகப்பாம்பு!

பாம்பும்  கீரியும் ஆக்கிரோஷமாக சண்டைபோட்டுக்கொள்ளும் பல வீடியோக்களை சமூக ஊடகங்களில் நீங்கள் பார்த்திருக்க கூடும். எந்த பாம்பைப் பார்த்தாலும், கீரிப்பிள்ளையால் தனது கோபத்தை அடக்கிக் கொள்ளவே முடியாது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 1, 2023, 08:06 PM IST
  • பாம்பிடம் அஞ்சாத சில உயிரினங்களில் கீரிப்பிள்ளையும் ஒன்றாகும்.
  • பாம்புக்கும் கீரிக்கும் இடையில் நடக்கும் சண்டை பொதுவாக மிக பயங்கரமாக இருக்கும்.
  • கீரிகள் உள்ள இடங்களில் பாம்புகள் இருக்காது எனவும் கூறுவதுண்டு.
Viral Video: கீரியின் கொடூரமான தாக்குதலில் சிக்கி சின்னாபின்னமான நாகப்பாம்பு! title=

பாம்புக்கும் கீரிக்கும் உள்ள பகை அனைவரும் அறிந்ததே. பாம்பும்  கீரியும் ஆக்கிரோஷமாக சண்டைபோட்டுக்கொள்ளும் பல வீடியோக்களை சமூக ஊடகங்களில் நீங்கள் பார்த்திருக்க கூடும். எந்த வகையான பாம்பைப் பார்த்தாலும், கீரிப்பிள்ளையால் தனது கோபத்தை அடக்கிக்கொள்ளவே முடியாது. உடனே அது பாம்பை கொலை வெறியில் தாக்க ஆரம்பித்து விடும். பாம்பிடம் அஞ்சாத சில உயிரினங்களில் கீரிப்பிள்ளையும் ஒன்றாகும். பாம்புக்கும் கீரிக்கும் இடையில் நடக்கும் சண்டை பொதுவாக மிக பயங்கரமாக இருக்கும் என்றாலும், பெரும்பாலும் இவற்றில் கீரிப்பிள்ளையே வெற்றி பெரும். 

கீரிகள் உள்ள இடங்களில் பாம்புகள் இருக்காது எனவும் கூறுவதுண்டு. கீரியின் உடலில் இயற்கையாகவே விஷ எதிர்ப்பு சக்தி உள்ளதால், பாம்பு கொத்தினால், கீரியின் உடலில் காயங்கள் தான் ஏற்படுமே தவிர, அது சாகாது என்று கூறுவார்கள். பொதுவாக பாம்பு கீரி சண்டையில் பாம்பை கீரி கொன்றுவிடும். பாம்பு படம் எடுத்து கீரியை தாக்கி களைத்துப் போன பின், சோர்வாக உள்ள பாம்பின் தலையை கடித்து கீரி கொன்றுவிடும். தற்போது வைரலாகும் வீடியோவிலும் இதனை காணலாம்.

மேலும் படிக்க | கார் சக்கரத்தில் மாட்டிய ஆடை;  சாலையில் இழுத்து செல்லப்பட்டு பரிதாபமாக இறந்த பெண்!

வைரலாகும் பாம்பு கீரி சண்டை வீடியோ:

வைராலாகி வரும் வீடியோவில், ​​பல அடி நீளமுள்ள நாகத்தை கீரி ஒன்று பயங்கரமாக  தாக்குவதைக் காணலாம். பாம்புக்கும் கீரிக்கும் இடையில் நடந்த சண்டையில், நொடியில், நாக பாம்பின் தலையை கீரி கவ்விப் படித்தது. இந்த வீடியோவில், தன்னை தாக்க வரும் கீரியை பாம்பு தாக்க முயற்சித்த போதும், கீரியின்  தாக்குதலுக்கு முன்னால், தாக்குபிடிக்க முடியாமல் திணறியது. பாம்பு கீரியை தாக்கும் போதே, புல்லட்டின் வேகத்தில் தாக்கி, நாகப்பாம்பிற்கு பதில் தாக்குதல் நடத்த நேரமே கொடுக்கவில்லை. பாம்பு தாக்குபிடிக்க முடியாமல் போனது. இறுதியில் பாம்பின் தலையை கவ்விக் கொண்டு இழுத்துக் கொண்டு போவதையும் வீடியோவில் காணலாம்.

மேலும் படிக்க | கொஞ்சம் விட்டிருந்தா சோலி முடிஞ்சிருக்கும், மலைபாம்புக்கு பல்பு: வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News