`ஜஸ்ட் மிஸ்` பிரேக் பிடிக்காத கப்பல் - வைரல் வீடியோ
கப்பல் ஒன்று பிரேக் பிடிக்காமல் தரை தட்டி நிற்கும் வீடியோ வைரலாகியுள்ளது.
கப்பல் பிரேக் பிடிக்கவில்லையா? என கேட்கலாம். ஆம், இந்த வீடியோவை பார்த்தால் உங்களுக்கும் அப்படி தான் தோன்றும். மழை மற்றும் புயல் காலங்களில் கரையோரம் நிறுத்தப்பட்டிருக்கும் கப்பல்கள் காற்றில் அசைந்தாடும். நீரில் நிறுத்தப்பட்டிருக்கும் கப்பல்கள் தண்ணீரில் கவிழவும் செய்யும். ஏனென்றால் கடல் பகுதிகளில் காற்று அளவுகடந்து வீசும். நங்கூரமிட்டிருந்தால்கூட வேகமாக வீசும் புயல் காற்றில் அவற்றால் நிற்க முடியாது.
மேலும் படிக்க | ஓவியரின் கைவண்ணத்தில் பிறந்த தத்ரூபமான புலி - வைரல் வீடியோ
இதுபோன்ற காலங்கள் மீனவர்கள் மற்றும் படகு, கப்பல் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு கடினமான காலம் தான். கப்பல்கள் சேதமடைந்துவிட்டால், அவற்றை மீண்டும் சீரமைத்து வேலைக்கு கொண்டு வருவதற்கு லட்சங்களில் பணம் செலவாகும். பெரிய சரக்கு கப்பல்கள் என்றால், கோடிக் கணக்கில் கூட செலவாகும். மழைகாலங்களில் கடற்கரையோரம் நிறுத்தப்பட்டிருக்கும் கப்பல்கள் குறித்த சேதங்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், அந்தப் பகுதிகளுக்கு நேரடியாக செல்லும்போது தெரிந்து கொள்ள வாய்ப்புள்ளது.
இப்போது வைரலாகியிருக்கும் வீடியோவிலும் கடும் புயலில் கடல்பகுதியில் நங்கூரமிட்டிருக்கும் கப்பல் வேகமாக நகர்ந்து வந்து கரையோரத்தில் இருக்கும் சுவறில் மோதி நிற்கிறது. அந்தப் பகுதியில் புயல் காற்று அகோரமாக வீசுகிறது. இதனால், கப்பல் நிற்க முடியாமல் தண்ணீரில் மிதந்து கொண்டே கரைக்கு நகர்த்தப்படுகிறது. இந்த வீடியோவை பார்க்கும்போது, கப்பலுக்கும் பிரேக் பிடிக்கவில்லையோ என நினைக்கத் தோன்றுகிறது. டிவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் இந்த வீடியோ வைரலாகியுள்ளது.
மேலும் படிக்க | யப்பா என்னா வெயிலு... ஏசியில் தஞ்சம் புகுந்த பூனை - வைரல் வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR