நாம் நிஜ வாழ்க்கையிலும் சரி, திரைபடங்களுலும் சரி பல வியக்கத்தக்கம், நூதன திருட்டு சம்பவங்களை பார்த்திருக்க கூடும். OTT தளத்தில்  வந்த Money Heist வெப்சீரிஸின் அனைத்து சீசன்களும் பெரும் வெற்றி பெற்றன.  நூதன கொள்ளை சம்பவங்கள் மிகவும் நூதனமானவை என்பதால், பெரிய அளவில் பிரபலம் அடைந்தன. ஆனால், நிஜ வாழ்க்கையில் கொள்ளை அடிப்பது மிகவும் எளிதாக இருக்கும் என்று நீங்கள் நினைத்தால், உங்கள் எண்ணம் மிகவும் தவறானது என்பதை நீங்களிந்த வைரல் விடியோவைப் பார்த்து புரிந்து கொள்வீர்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் கொள்ளை வீடியோ (Viral Video) உங்கள் எண்ணத்தையே மாற்றி விடும். இதில் மூன்று திருடர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து லாரியில் வைத்திருந்த பொருட்களை கொள்ளையடித்ததைக் காணலாம். ஓடும் லாரியில் இருந்து பொருட்களை திருட இவர்கள் செய்த சாகச முயற்சி, பார்ப்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தும்


உயிரைப் பணயம் வைத்து செய்யப்பட்ட திருட்டு


இந்த வீடியோ ராஜா பாபு என்ற ட்விட்டர் கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இந்த காணொளியை பார்த்த  பிறகு உஙல் மூச்சே நின்று விடும் எனலாம். வீடியோவில் நீங்கள் மூன்று பேரைப் பார்ப்பீர்கள். டிரக்கில் இரண்டு பேர் அமர்ந்துள்ளனர், ஒரு பைக் ஓட்டுநர் ட்ரக்கை பின்னால்  தொடர்ந்து வருகிறார். மேலே இருந்தவன் லாரியிலிருந்து ஒரு அட்டை பெட்டியை எடுத்து ரோட்டில் வீசுகிறான். இந்த நேரத்தில் பைக்கர் லாரிக்கு மிக அருகில் பைக்கை ஓட்டத் தொடங்குகிறார். இரண்டு பேரும் ஒவ்வொருவராக மிக மெதுவாக ஓடும் ட்ரக்கில் இருந்து கீழே இறங்குகிறார்கள். முதலில் பைக்கில் ஒருவர் அமர்கிறார், பிறகு மற்றொருவர் பைக்கில் அமர்ந்தார். அதன் பிறகு லாரி அதன் வழியில் செல்ல, இருசக்கர வாகன ஓட்டிகள் திரும்பிச் செல்கின்றனர்.


வைரலாகும் வீடியோவை இங்கே காணலாம்:



மேலும் படிக்க |  நடுரோட்டில் போலீசை வம்பிழுக்கும் நாய்! இணையத்தில் வைரலாகும் வீடியோ!


வைரலாகும்ஜ் இந்த வீடியோவைப் பகிர்ந்த, ​​ராஜா பாபு, அமெரிக்கர்கள் ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் 7 பற்றி பேசுகிறார்கள்... ஆமால் இங்கே இந்தியாவில் பல்சர் பைக் வைத்து கொண்டே இந்த சாகசங்களை செய்கிறோம் என்று தலைப்பில் வீடியோவை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவைப் பார்த்த பயனர் ஒருவர் அடுத்த பாலிவுட் படத்திற்கான கதை கண்டுபிடிக்கப்பட்டதாக எழுதியுள்ளார். இந்த கொள்ளையில் லாரி டிரைவருக்கும் தொடர்பு இருப்பதாக சில பயனர்கள் கருதுகின்றனர். அதனால் தான் லாரியை கவனமாக ஓட்டி வருகிறார். ஒரு பயனர் இதை அக்ஷய் குமார் அளவிலான ஸ்டண்ட் என்று கூறியுள்ளார்.


மேலும் படிக்க | முத்தம் கொடுத்தது ஒரு குத்தமா... மணமகனை அடித்து துவைத்த மணப்பெண் வீட்டார்..!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ