சமீபகாலமாக நாய் மற்றும் பூனைகளின் குறும்புத்தனமான காட்சிகள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றன.  அவை ரசிக்கும்படியாகவும், நகைச்சுவையை ஏற்படுத்தும் வகையிலும் அமைந்து வைரலாகி வருகிறது.  தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் பூனை ஒன்று நாய்க்கு மசாஜ் செய்து தூங்கவைக்கிறது, இந்த காட்சி அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.  மசாஜ் செய்வது உடலுக்கு இதமாகவும், நல்ல உறக்கத்தையும் கொடுக்கிறது அதிலும் இந்த பூனை மசாஜ் செய்வதை பார்ப்பது இதயத்துக்கு இதமாக இருக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | முடிஞ்சா எங்களை தாண்டி போயி பாரு..வாகன ஓட்டிகளை நடுங்க வைத்த நாய்கள்! 


இந்த வீடியோவானது ட்விட்டரில், பைடெங்பைடன் என்கிற கணக்கு பக்கத்தில் பதிவிடப்பட்டடு இருக்கிறது.  இந்த வைரல் வீடியோவில், பழுப்பு நிறத்தில் நாய் ஒன்று மெத்தையின் மீது படுத்திருக்கிறது, அதன் மீது பூனை ஒன்று படுத்திருப்பதை காணலாம்.  அந்த பூனையானது நாயின் முகத்தில் இரு கைகளையும் வைத்து மசாஜ் செய்வது போல செய்கிறது.  பூனை மசாஜ் செய்யும் சுகத்தில் மயங்கிய நாய் அமைதியாக உறங்கிக்கொண்டு இருக்கிறது.  இணையத்தில் பதிவேற்றப்பட்ட இந்த காட்சி பார்வையாளர்களை ரசிக்க செய்துள்ளது. 


 



இந்த வீடியோவுடன் 'மசாஜ் டைம்' என்கிற கேப்ஷனும் பதிவிடப்பட்டுள்ளது.  ஏப்ரல்-10ம் தேதி பதிவிடப்பட்டுள்ள இந்த வீடியோவை பல்லாயிரக்கணக்கான இணையவாசிகள் பார்த்து ரசித்து இருப்பதோடு, இந்த வீடியோ இருபத்து நாலாயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகளையும் பெற்றுள்ளது.  நெட்டிசன்கள் பலரும் இந்த அழகிய காட்சிக்கு சிறப்பான கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.


மேலும் படிக்க | Viral Video: கழுகு குஞ்சு பொரிக்கும் அற்புத காட்சி; படம் பிடித்த ரகசிய கேமரா 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR