நாளுக்கு நாள் இணையம் பலவிதமான ரசிக்கும்படியான காட்சிகளை நமக்கு கொடுத்துக்கொண்டே இருக்கின்றன.  பரபரப்பான சூழலில் இணையத்தில் நாம் காணும் சில சம்பவங்கள் மனதை இதமாக்குவதாய் அமைந்திருக்கிறது.  குழந்தைகளின் குறும்புகள் போல பூனைகளின் குறும்புகளுக்கு ஒரு அளவே இல்லாமல் போய்விட்டது, அவை எதேச்சையாக செய்யும் செயல்கள் கூட பலரது இதயங்களையும் கொள்ளை கொண்டு விடுகிறது.  தற்போது வைரலாகி வரும் ஒரு விடீயோவில் பூனை ஒன்று கண்ணாடி பானைக்குள் தவறி விழுந்து வெளியேற முயற்சிக்கும் காட்சி ஒன்று சிரிப்பை வரவைக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | சிங்கத்தை துரத்தி துரத்தி படுத்தும் ஆமை, சைலண்டா சிங்கம் நிற்க காரணம் என்ன: வைரல் வீடியோ


ட்விட்டரில் பல விலங்குகளின் அரிய காட்சிகளை பகிரும் சிசிடிவி இடியட்ஸ் என்கிற கணக்கு பக்கத்தில் தான் இந்த பூனையின் வீடியோவும் பகிரப்பட்டுள்ளது.  அந்த வீடியோவில், ஒரு மேஜையின் மீது பளபளப்பான கண்ணாடி பானை ஒன்று வைக்கப்பட்டுள்ளது, அதனருகே செம்பழுப்பு நிறத்தில் அழகிய பூனை ஒன்று நின்றுகொண்டு இருக்கிறது.  பின்னர் அந்த கண்ணாடிக்குள் என்ன இருக்கிறதென்று பூனை முதலில் தலையை விட்டு எட்டி பார்க்கிறது, மெதுவாக தனது முன்னங்கால்கள் இரண்டையும் பானையினுள் விட்டு பாதி உடல் பானைக்குள் சென்று விடுகிறது.  அதனைத்தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக தனது முழு உடலையும் கண்ணாடி குவளைக்குள் இழுத்துக்கொண்டு திருதிருவென்று முளைக்கிறது.  பின்னர் அந்த பூனை மெதுவாக வெளியேற முயற்சிப்பதுடன் இந்த வீடியோ நிறைவுபெறுகிறது.


 



இணையத்தில் பதிவேற்றப்பட்ட இந்த வீடியோவிற்கு இதுவரை பதின்மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகள் குவிந்துள்ளது.  ஒரு பயனர் பூனையின் செயலை சோ கியூட் என்று கமெண்ட் செய்துள்ளார், மறொருவர் புத்திசாலியான பூனை என்று கமெண்ட் செய்துள்ளார்.  இந்த வீடியோவுடன் லிக்யூட் கேட் என்கிற வசனத்துடன் சிரிப்பு எமோஜியும் சேர்த்து கேப்ஷனாக பதிவிடப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | Viral Video: இது தான் கடல் அரக்கனா... ஆற்றில் உலாவும் ராட்சஸ மீன்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR