இணைய உலகில் பகிரப்படும், விலங்குகள் தொடர்பான வீடியோக்கள் என்றுமே மக்கள் விருப்பமாக உள்ளது. நூற்றுக்கணக்கான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் தினமும் பகிரப்பட்டாலும், சில வீடியோக்கள் மட்டுமே மிகவும் வைரலாகின்றன.
இதுவரை அனிமேஷன் திரைப்படங்கள், கார்ட்டூன்கள் மற்றும் குழந்தைகளுக்கான கதைத் தொகுப்புகளில் கடல் அரக்கர்களைப் பற்றிப் கேள்விப்பட்டிருப்பீர்கள், பார்த்திருப்பீர்கள். ஆனால் கடல் அரக்கன் நிஜத்தில் இருக்கிறது, மனிதர்கள் அதை பார்த்துள்ளனர் என்று சொன்னால் நம்ப முடியவில்லை இல்லையா.... ஆனால் எங்களிடம் ஆதாரம் உள்ளது.
கடல் அரக்கன் போல் பயங்கர தோற்றம் கொண்ட ராட்சஸ மீன் ஒன்று ஆற்றில் நீந்திச் செல்லும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இணையத்தில் இது Loch Ness Monster என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
வைரலான கடல் அரக்கனின் வீடியோவை இங்கே பாருங்கள்!
மேலும் படிக்க | மானை இறுக்கும் மலைப்பாம்பு; சிக்கித் தவிக்கும் மான்... ஆனால்... நடந்தது என்ன..!!
வட அமெரிக்காவில் படமாக்கப்பட்ட வீடியோவில், ராட்சத மீன் ஒன்று ஆற்றில் நீந்துவதைக் காணலாம். அதன் உடலமைப்பு மக்களை திகைக்க வைத்துள்ளது. இது ஒரு கடல் அரக்கன் என்று மக்கள் நம்புகிறார்கள்.
தற்போது வைரலான இந்த வீடியோவை இதுவரை 3.8 மில்லியன் பார்வைகளையும், 122 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகளையும் பெற்றுள்ளது.
இந்த மீன் இனமானது பெலுகா ஸ்டர்ஜன் மற்றும் கனடாவின் வெள்ளை ஸ்டர்ஜன் இனத்தைச் சேர்ந்தது என்று நம்பப்படுகிறது. ஸ்டர்ஜன்கள் 100 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்கின்றன என்பதோடு பல நூறு கிலோ எடையுள்ளவை என்று நம்பப்படுகிறது.
மேலும் படிக்க | Viral Video: ‘முட்டை இட’ கடற்கரைக்கு படையெடுக்கும் லட்சக்கணக்கான கடல் ஆமைகள்..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR