Viral Video: இணையத்தில் பலவித வீடியோக்கள் தினமும் வலம் வருகின்றன. இவற்றில் சில வீடியோக்களுக்கு மக்களின் பேராதரவு கிடைத்து விடுகிறது. அதுவும் கடந்த சில நாட்களாக பாம்புகள் இணையத்தில் படம் எடுத்து ஆடுகின்றன. பாம்புகளின் வீடியோக்கள் தற்போது  இணையத்தை கலக்கி வருகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாம்பென்றால் (Snake) படையும் நடுங்கும் என்பார்கள். பாம்புகள் மீது மனிதனுக்கு எவ்வளவு அச்சம் உள்ளதோ, அவ்வளவு ஆச்சரியமும் உள்ளது. அருகில் இருந்தாலும் தொலைவில் கண்டாலும், பாம்பென்றால் அனைவருக்கும் பதட்டம்தான். 


எனினும், சிலருக்கு பாம்புகளோடு தோழமையும் உண்டாகிவிடுகிறது. பாம்ப்புகளை பாசமாக பார்த்துக்கொள்ளும் சில அபூர்வ மனிதர்களும் நம்மிடையே உள்ளனர். ஆனால், இங்கு ஒருவரை ஒரு பாம்பு பாடாய் படுத்தியுள்ளது, அதுவும் படமெடுத்த நிலையில் பாடாய் படுத்தியுள்ளது. 


அப்படிப்பட்ட ஒரு சுவாரசியமான வீடியோ தற்போது வைரல் (Viral Video) ஆகியுள்ளது. ஒரு வீட்டினுள் நுழைந்த பாம்பு ஒன்று கதவின் இடுக்கில் ஒய்யாரமாக அமர்ந்து, படம் பிடிக்க வரும் நபரின் மீது சீறும் காட்சிகள் வைரல் ஆகி வருகின்றன. 


ALSO READ: Viral Video: இணையவாசிகளை கவர்ந்த மலைப் பாம்பின் வீடியோ 


இந்த வீடியோவை  இந்திய வனத்துறை அதிகாரி சுஷாந்தா நந்தா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை இதுவரை சுமார் 14 அயிரத்துக்கும் மேலானோர் பார்த்துள்ளனர். 



ஒரு வீட்டின் கதவில் அமர்க்களமாய் அமர்ந்து ஒரு பாம்பு அந்த வீட்டின் பாதுகாவலனாகனே மாறி விடுகிறது. படம் எடுத்து ஆடும் அந்த பாம்பை ஒருவர் படம் எடுக்க முயற்சிக்க, அதுவோ அவர் மீதி சீறி அவரை பயத்தில் ஆழ்த்துகிறது.


இந்த சம்பவம் எங்கு நடந்தது என்பது பற்றி தெளிவாகத் தெரியவில்லை. எனினும், கதவின் இடுக்கில் அசால்டாய் அமர்ந்து படம் எடுத்து பயம் கொடுக்கும் இந்த பாம்பை நெட்டிசன்கள் விரும்பிப் பார்த்து வருகின்றனர். இதற்கு ஏராளமான லைக்குகளையும் அள்ளி வீசி வருகின்றனர்.


கடந்த சில நாட்களாக, பாம்புகளின் இப்படிப்பட்ட பல வீடியோக்கள் (Video) வைரல் ஆகியுள்ளன. நீரில் பின்னிப்பிணைந்து படம் எடுக்கும் பாம்புகளின் வீடியோ, வீட்டுக்குள் புகுந்த 15 அடி பாம்பின் வீடியோ, பாம்பை பிடித்த பெண்ணின் வீடியோ என பாம்பின் பல வீடியோக்கள் வைரல் ஆகியுள்ளன. 


ALSO READ:Viral Video நீரில் பின்னிப்பிணைந்த பாம்புகள்: இது காதலா? கிரோதமா? 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR