மார்கெட்டிற்கு சென்று காய் வாங்கும் நாயின் வீடியோ இணையத்தில் வைரல்!
நாய் ஒன்று சந்தைக்கு சென்று காய்கறிகள் மற்றும் பழங்களை வாங்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி உள்ளது.
வீட்டு வளர்ப்பு பிராணிகளில் நாய்களுக்கு அதிகமாக அறிவு உள்ளது என்பதை உணர்த்தும் விதமாக ஒரு வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. நாய் ஒன்று சந்தைக்கு சென்று அதற்கு தேவையான காய்கறிகள் மற்றும் பழங்களை காசு கொடுத்து வாங்குகிற காட்சி இணையத்தில் பகிரப்பட்டு இருக்கிறது. இதுபோன்று விலங்குகளின் அறிவுபூர்வமான நடத்தையை பார்க்கும்பொழுது வியப்பாக இருக்கிறது. இந்த விலங்குகளை இவ்வளவு திறமையாக மாற்றியதில் அதன் உரிமையாளருக்கு தான் அதிக பங்கு இருக்கிறது. நாயின் இந்த வீடியோ பலரையும் கவர்ந்து இருக்கிறது.
ட்விட்டரில் அபிஸ் நேச்சர் என்கிற கணக்கு பக்கத்தில் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் நாய் ஒன்று வாயில் சிவப்பு நிற பிளாஸ்டிக் கூடையை கவ்விக்கொண்டு சந்தைக்கு காய்கறி வாங்க செல்கிறது. முதல் க்ளிப்பில் அந்த நாய் தனக்கு வேண்டிய காய்கறியை கடைக்காரரிடம் காமிக்க, அவர் கூடையில் காய்கறியை வைத்துவிட்டு காசை எடுத்து கொள்கிறார். பின்னர் அந்த நாய் அருகிலுள்ள கடைகளுக்கு சென்று மற்ற காய்கறிகளையும் வாங்கிவிட்டு செல்கிறது. அடுத்த க்ளிப்பில் ஒரு நாய் பழக்கடைக்கு சென்று பழங்கள் வாங்கிவிட்டு, மனிதர்கள் பேரம் பேசி வாங்குவது போல பழத்தை கேட்டு வாங்குகிறது. மீண்டும் பழத்தை போடுமாறு கடைக்காரரிடம் கேட்கிறது, அவர் முடியாது என்று கை அசைக்க சட்டென்று ஒரு பலத்தை வாயால் கவ்வி கூடையில் போட்டுகொண்டு ஓடிவிடுகிறது.
அதனைத்தொடர்ந்து அடுத்த க்ளிப்பில் இரண்டு நாய்கள் கூடையை வாயால் கவ்வி கொண்டு வந்து காய்கறிகளை வாங்கி கொண்டு செல்வதுடன் வீடியோ முடிவடைகிறது. இணையத்தில் பதிவேற்றப்பட்ட இந்த வீடியோவை இதுவரை 1.4 மில்லியனுக்கும் அதிகமான இணையவாசிகள் பார்த்து ரசித்துள்ளனர். மேலும் இந்த வீடியோவிற்கு ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகளும், பல கமெண்டுகளும் குவிந்துள்ளது.
மேலும் படிக்க | பீட்சா டெலிவரி பெண்ணுக்கு தர்ம அடி, 4 பெண் ரவுடிகளின் வீடியோ வைரல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR