நாய்க்கு வந்த சோதனை; தண்ணீர் குடத்தில் தலை சிக்கி தவித்த நாய்
இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.
Viral Video: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன.
சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் விலங்குகளின் வீடியோக்கள் இணையத்தில் பட்டையைக் கிளப்பி வருகின்றன.
மேலும் படிக்க | Florida: சாலையில் ‘ஓணான்கள்’ மழை; பதற்றத்தில் மக்கள்!
அதன்படி தற்போது கோவை வெள்ளலூர் சந்தைகடை பகுதியில் தெரு நாய் ஒன்று தாகத்திற்கு அப்பகுதியில் சுற்றி வந்துள்ளது. அப்போது அங்கு இருந்த பிளாஸ்டிக் குடத்தினுள் தண்ணீர் இருப்பதாக நினைத்துள்ளது அந்த நாய். இதையடுத்து அந்த நாய் பிளாஸ்டிக் குடத்தினுள் தண்ணீர் குடிக்க முயற்சித்துள்ளது.
அப்போது தான் அந்த நாய்க்கு தெரியும் அந்த குடத்தில் தண்ணீர் இல்லை ஓட்டையென்று, இதைத் தொடர்ந்து தலையை வெளியே எடுக்கும் போது நாயின் தலை பிளாஸ்டிக் குடத்தினுள் மாட்டிக்கொண்டது. இதனையடுத்து செய்வதறியாமல் தவித்த நாய் ரோட்டில் அந்த பக்கம் இந்த பக்கம் என ஒடிக்கொண்டு இருந்தது.
அரை மணி நேரத்திற்கு மேலாக தவித்த நாயை, அப்பகுதி மக்கள் நாயை பிடித்து குடத்தை மட்டும் அறுத்து எடுத்து மீட்டனர். தற்போது குடத்தினுள் தலை மாட்டிக்கொண்டு நாய் ஓடும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது..
மேலும் படிக்க | Spider Bite: சிறிய சிலந்தி தானே என எண்ண வேண்டாம்; ஒரு பெண்மணியின் பகீர் அனுபவம்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR