இணையம் பலவகையான அற்புதங்களால் நிரம்பியுள்ளது, அதில் வலம்வரும் சில சம்பவங்கள் நம்மை வியக்கவைக்கும், சில சம்பவங்கள் நம்மை மகிழ்விக்கும், சில சம்பவங்கள் நம்மை எரிச்சலடைய செய்யும், சில சம்பவங்கள் உணர்வுபூர்வமானதாக இருக்கும், சில சம்பவம் ஆர்வத்தை தூண்டும்.  இப்படி நம்மிடையே பலவிதமான உணர்வுகளை ஏற்படுத்தக்கூடிய பல சம்பவங்கள் இணையத்தில் உலாவி கொண்டு இருக்கின்றன.  தற்போது இணையத்தில் பரவியுள்ள ஒரு காட்சி அடுத்து என்ன நடக்கப்போகிறது என்கிற ஆர்வத்தை தூண்டும் வகையில் அமைந்திருக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ஓடும் பைக்கில் செல்ஃபி எடுக்க போய் சொதப்பிய நபரின் வைரல் வீடியோ


அந்த வைரல் வீடியோவானது ட்விட்டரில், யோக் என்கிற கணக்கு பக்கத்தில் பகிரப்பட்டு இருக்கிறது.  அந்த வீடியோவில், ஆள்நடமாட்டம் இல்லாத ஒரு பகுதியில் கிடக்கும் பழைய நாற்காலி மீது பூனை ஒன்று உட்கார்ந்து இருக்கிறது.  அதற்கு நேரெதிரே நாய் ஒன்று பூனையை அடித்துக்கொண்டும், பயமுறுத்தி கொண்டும் இருக்கிறது.  பின்னர் இரண்டாவதாக ஒரு நாய் வந்து அந்த நாயின் அருகில் நிற்கிறது, திடீரென ஹீரோ போல் அந்த இடத்திற்கு விரைந்து மூன்றாவதாக வந்த நாய் ஒன்று வேகமாக அந்த நாயை தாக்கி, பூனையை காப்பாத்துகிறது.  அதனைத்தொடர்ந்து அந்த நாய், பூனையை பாசமாக ஆரத்தழுவி கொஞ்சுவதுடன் இந்த வீடியோ முடிவடைகிறது.


 



இந்த அற்புதமான வீடியோவை இதுவரை பத்தொன்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்த்து ரசித்துள்ளனர்.  மேலும் இந்த வீடியோவிற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகளை குவிந்துள்ளது, இந்த வீடியோக்களை நெட்டிசன்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.


மேலும் படிக்க | கிளாஸா மலை ஏறி மாஸ் காட்டிய பாட்டியின் வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR