கிளாஸா மலை ஏறி மாஸ் காட்டிய பாட்டியின் வைரல் வீடியோ

Viral Video: பாட்டிக்கு பின்னால் நிற்கும் இளைஞர்கள் அவர் வேகமாக மலை ஏறுவதை ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். பாட்டியின் வேகமும் துடிதுடிப்பும் அனைவரையும் வியக்க வைக்கிறது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 21, 2022, 03:02 PM IST
  • சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன.
  • இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
  • இந்த வீடியோ ஒரு 62 வயது மூதாட்டியினுடையது.
கிளாஸா மலை ஏறி மாஸ் காட்டிய பாட்டியின் வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 

சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.

இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோ ஒரு 62 வயது மூதாட்டியினுடையது. இவர் தோட்டாவின் வேகத்தில் மலை ஏறுவதை வீடியோவில் காண முடிகின்றது. 

பாட்டிக்கு பின்னால் நிற்கும் இளைஞர்கள் அவர் வேகமாக மலை ஏறுவதை ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். பாட்டியின் வேகமும் துடிதுடிப்பும் அனைவரையும் வியக்க வைக்கிறது.

தினசரி பணிகளை செய்வதற்கே இளைஞர்களுக்கு சோம்பேறித்தனம் வரும் இந்நாட்களில் இந்த பாட்டியின் வேகமும் சுறுசுறுப்பும் மக்களை ஆச்சரியப்படுத்துகின்றது. ஆச்சரியமளிக்கும் இந்த வீடியோ இதுவரை ஆயிரக்கணக்கான முறை பார்க்கப்பட்டுள்ளது. ஏராளமான நெட்டிசன்கள் இதை லைக் செய்துள்ளனர்.

மேலும் படிக்க | மனித நேயம் மிக்க செயல்; காக்கைகளிடம் சிக்கித் தவித்த ஆந்தையை மீட்ட பள்ளி மாணவி! 

புல்லட்டின் வேகத்தில் பாட்டி மலை ஏறினார்

சில நொடிகளே கொண்ட இந்த வீடியோவில், மலை உச்சியில் ஒரு ஆணும், கீழே பாட்டியும் நிற்பதைக் காண முடிகிறது. பார்த்துக்கொண்டிருக்கும் போதே, பாட்டி, கயிற்றின் உதவியுடன் கிடுகிடுவென மலை ஏறுகிறார். பாட்டி மலை ஏறுவதைப் பார்த்தால், அவருக்கு இவ்வளவு வயதானதே தெரியவில்லை. இளைஞர்களுக்கான சுறுசுறுப்புடன் அவர் மலை ஏறுகிறார். 

இந்த வீடியோ பிப்ரவரி 16-ம் அன்று எடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. பெங்களூருவை சேர்ந்த அந்த பாட்டி தனது மகன் மற்றும் அவர்களது நண்பர்களுடன் கேரளாவில் உள்ள சஹ்யாத்ரி மலைத்தொடரின் உச்சியில் ஏறுவதற்காக வந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ இது என தெரியவந்துள்ளது. 

வெற்றிகரமாக ஏறிய பிறகு, கடந்த நாற்பது ஆண்டுகளாக தான் குடும்பப் பொறுப்பில் பிஸியாக இருந்ததாக பாட்டி கூறினார். தற்போது தனது மகன்கள் வளர்ந்து செட்டில் ஆகி விட்டதால், இனி தனது கனவுகளை கனவுகளை நிறைவேற்ற விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பாட்டி ஏறி முடித்த மலை 1868 மீட்டர் உயரம் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

கிளாஸாக மலை ஏறி மாஸ் காட்டிய பாட்டியின் வைரல் வீடியோவை இங்கே காணலாம்:

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டதில் இருந்து, இது படு சூப்பராக இன்ஸ்டாகிராமில் வைரல் ஆகி வருகிறது. நெட்டிசன்களும் பாட்டியை பாராட்டி பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர். இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் Timeofkarnataka என்ற பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | நடுவானில் ஒரு அற்புதமான காதல் நடனம்; இது கழுகுகளின் காதல் வீடியோ! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News