Viral Video Of Elderly Couple Dancing : மனிதர்கள் அனைவருமே மிகவும் சிம்பிளான உயிரினங்கள் ஆவர். அதிலும், குழந்தைகளும் வயதானவர்களும் செய்யும் பல விஷயங்களை ‘க்யூட்’ என்ற ரகத்தில் கூட வைக்க முடியாத அளவிற்கு அவ்வளவு அழகாக இருக்கும். ஒருவர், இன்னொருவருக்கு மட்டடற்ற மகிழ்ச்சியை கொடுப்பதற்கு பெரிய பொருளை அல்லது பணத்தை கொடுக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. அவரது முகத்தில் புன்னகையை வரவழைக்க செய்யும் ஒரு சிறிய செயலே போதும், உள்ளமே குளிர்ந்து விடும். அப்படி, நெட்டிசன்களை மகிழ வைக்கும் ஒரு வீடியோ, இணையத்தில் வைரலாகி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வைரல் வீடியோ:


இணையத்தில் சமீபத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில்,  இரு வயதான தம்பதிகள், புதிய காருக்கு முன்னர் நிற்கின்றனர். அந்த காருக்கான சாவியை, கடையின் ஊழியரிடம் இருந்து கைகளில் எடுத்தவுடன் அவர்கள் மகிழ்ச்சியில் ஆடுகின்றனர்.



அது, பிறர் ஆனந்தத்தில் ஆடுவது போல துள்ளல் நடனம் எல்லாம் கிடையாது. தங்களால் முடிந்த அளவிற்கு இசைக்கு ஏற்ப உடலை வளைத்து-நெளித்து ஆடுகின்றனர். முதலில், முதியவர்தான் ஆட ஆரம்பிக்கிறார். அதை பார்த்தவுடன் முதலில் தயங்கும் அவரது மனைவி பின்பு தானும் சேர்ந்து ஜாலியாக நடனமாட ஆரம்பிக்கிறார். போகப்போக, அந்த தாத்தாவை மிஞ்சும் அளவிற்கு ஜாலியாக ஸ்டெப் போட்டு நடனமாடுகிறார். இந்த வீடியோவை பார்க்கும் நெட்டிசன்கள், இதற்கு லைக்ஸ் மழையை குவித்து வருகின்றனர். 


மேலும் படிக்க | Viral Video: ஆக்டோபஸ் செய்யும் சாகசம்... கடலில் கூலாக ஜாக்கிங் போகும் அரிய காட்சி


நெட்டிசன்களின் கருத்து:


ஒரு சிலர், இந்த வீடியோவிற்கு லைக்ஸ் மட்டும் போட்டுவிட்டு செல்ல, இன்னும் சிலர் கமெண்ட் செக்‌ஷனில் தங்களது கருத்துகளையும் பதிவிட்டு வருகின்றனர். ஒருவர், “இந்த கனவை அடைய அவர்கள் எத்தனை நாட்கள் காத்துக்கொண்டிருந்தனரோ..இப்போது கடைசியாக அது அவர்களின் கைகளில் கிடைத்திருக்கிறது” என்று கூறியிருக்கின்றார். 


இன்னும் சிலர், “சில க்ரிஞ்ச் வீடியோக்களை பார்ப்பதற்கு இதுவே எவ்வளவோ பரவால்ல..” என்று கூற, இன்னும் சிலர் “இவர்கள் இன்னும் நெடுங்காலம் ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகள்” என்று வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 5 நாட்களுக்கு முன்னர் பதிவிடப்பட்ட இந்த வீடியோ, எப்போது எங்கே எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை. ஆனால், 5 நாட்களிலேயே கிட்டத்தட்ட 5 லட்ச லைக்ஸ்களை பெற்றிருக்கிறது. பல மில்லியன் வியூஸ்களையும் ஷேர்ஸ்களையும் கூட இந்த வீடியோ பெற்றிருக்கிறது. 


மேலும் படிக்க | சைசெல்லாம் ஒரு மேட்டரே இல்ல... 7 அடி பாம்பை பந்தாடிய 15 செ.மீ தேள்: தூள் கிளப்பும் வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ