மருதாணி வைத்துக்கொண்ட குரங்கு: மயங்கிய நெட்டிசன்ஸ்.. வைரல் வீடியோ

Viral Video: குரங்குகளுக்கான அத்தனை இலக்கணங்களையும் இந்த சின்ன குரங்கு மீறி விட்டது. பல பேருக்கு மத்தியில் அமைதியாக இருப்பதோடு மட்டுமல்லாமல் மிகவும் பொறுமையாக மெஹந்தி இட்டுக் கொள்ள குரங்கு தன் கையை காட்டுகிறது.

இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் jassi____mehra123 and gaggi_mehr என்று கணக்கில் பகிரப்பட்டுள்ளது. எனினும், இந்த சம்பவம் எங்கு நடந்தது என்பது பற்றி தெரியவில்லை. இந்த வீடியோவுக்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பலவித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.

Trending News