இணையம் ஒரு தனி உலகம். அதில் தகவல்களுக்கு என்றும் பஞ்சமில்லை. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு தகவல் களஞ்சியமாக விளங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு தளமாகவும் உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களையும், மனழுத்தங்களையும் சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குறிப்பாக, வனவிலங்குகள் தொடர்பான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிடுகின்றன. விலங்குகளில் குரங்கு, யானை, பாம்பு, நாய் என இவற்றின் வீடியோவுக்கு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.  அந்த வகையில் யானையின் வீடியோ ஒன்று மிகவும் வைரலாகி வருகிறது.


கர்நாடக மாநிலம் கோடாக் மாவட்டத்தில்  குழியில் விழுந்த காட்டு யானை ஜேசிபி இயந்திரம் மூலம் மீட்கப்பட்டது. ஜேசிபி இயந்திரம் மூலம் காட்டுக்கொம்பன்  என்னும் யானை மீட்கப்பட்ட நிலையில், ஜேசிபியை வில்லனாக நினைத்து  யானை தீவிரமாக மோதி சண்டையிடும் வீடியோவை IFS அதிகாரி சுதா ராமன் பகிர்ந்துள்ளார்.


மேலும்படிக்க | Viral Video: கிளி பேசி பார்த்திருப்பீங்க.... பியானோ இசைத்து பார்த்திருக்கீங்களா!


வைரலாகும் யானை வீடியோவை கீழே காணலாம்:


 



 


யானையை குழியில் இருந்து தூக்கி எடுக்க பலமுறை முயன்றும் முடியவில்லை. பின்னர் ஜேசிபி மூலம் யானை குழியில் இருந்து வெளியே கொண்டு வரப்பட்டது. ஆனால், வெளியே வந்த கொம்பன் ஜேசிபி இயந்திரத்தை வில்லனாக நினைத்து கடுமையாக சண்டையிடுகிறது. குழியில் இருந்து வெளியே வந்த காட்டானா வனப்பகுதிக்குள் செல்லாமல் ஜேசிபியுடன் போராடி வருகிறது. யானையை காட்டுக்குள் திருப்பி அனுப்ப வனக்காவலர்களும், உள்ளூர் ஆட்களும் சத்தம் போடுவதை வைரல் வீடியோவில் கேட்கலாம். ஆனால் ஜேசிபியுடன் காட்டு யானை தொடர்ந்து மோதுகிறது. பின்னர் வனத்துறையினர் பட்டாசு வெடித்து யானையை வனப்பகுதிக்குள்  விரட்டி விட்டனர். இப்பகுதியில் வன விலங்குகளின் தொல்லை அதிகமாக உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.


மேலும் படிக்க | Viral Video:நீரை கிழித்து இரையை பிடிக்கும் ஆஸ்ப்ரே பறவை! கடலில் ஒரு மீன் வேட்டை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ