வைரல் வீடியோ: அன்றாடம் மிகவும் வித்தியாசமான, வேடிக்கையான, வினோதமான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி, பயனர்களின் ஆர்வத்தை பெரிதும் ஈர்க்கின்றன. அந்த வகையில் யுத்த களமாக மாறிய வகுப்பறை தொடர்பான வீடியோ அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும் அளித்துள்ளது. கான்பூர் பள்ளியின் வகுப்பறையில் மூன்று சிறுமிகளுக்கு இடையே ஏற்பட்ட வெறித்தனமான சண்டை தொடர்பான ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. வீடியோவில், பள்ளி சீருடை அணிந்த 3 மாணவிகள், பரஸ்பரம் முடியை ஒருவர் பிடித்து வெறித்தனமாக இழுத்து, குடுமி பிடி சண்டை போடுவதைக் காணலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மாணவிகள் பரஸ்பரம் ஆக்ரோஷமாக தாக்கிக் கொள்ளும் வீடியோ மிகவும் வைரலாகி வரும் நிலையில், அதில், வகுப்பறையில் உள்ள மற்ற மாணவிகள் சண்டையை நிறுத்தும்படி கோருவதையும் வீடியோவில் கேட்கலாம். மேலும், சிலர் இவர்கள் சண்டையில் தலையிட்டு சண்டையை நிறுத்த முயல்வதையும் காணலாம். ஆனால் பயனில்லை.


பத்திரிகையாளர் அமித் சிங் வீடியோவைப் பகிர்ந்துகொண்டு , “கான்பூரில் உள்ள ஒரு புகழ்பெற்ற தனியார் பள்ளியின் மாணவிகள் இந்த சண்டை வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது. இந்த உயர்நிலைப் பள்ளி மாணவிகள் பள்ளி நேரத்தில் பரஸ்பரம் கடுமையாக தாக்கிக் கொள்கின்றனர்” என பதிவிட்டுள்ளார்.


மேலும் படிக்க | Viral Video: மலைப்பாம்பிடம் சிக்கிய முதலை... திக் திக் நிமிடங்கள்


கான்பூர் பள்ளி மாணவிகள் பரஸ்பரம் சண்டையிடும் வீடியோவைப் கீழே காணலாம்:



இந்த வீடியோ 85.9 K பார்வைகள் மற்றும் 300 க்கும் மேற்பட்ட ரீட்வீட்களுடன் வைரலாகியுள்ளது. இந்த மோசமான சண்டையின் பின்னணியில் உள்ள காரணத்தை அறியவும் மக்கள் ஆர்வமாக உள்ளனர். சிலர் கிளிப்பைப் பார்த்து அதிர்ச்சியை வெளிப்படுத்தினர். வகுப்பறையில் இவ்வளவு வன்முறையா என கவலை தெரிவித்தனர்.


ஒரு பயனர் நகைச்சுவையாக எழுதுகையில், "கூடுதல் பாடத்திட்ட செயல்பாடுகளுக்கான முழு மதிப்பெண்கள் கொடுக்கலாம்" என பதிவிட்டுள்ளார். இதற்கு முன்னர் பள்ளியில் இதுபோன்ற சண்டையை எப்போதாவது பார்த்தீர்களா... இந்த வகுப்பறை வன்முறை குறித்து பலர் மிகுந்த அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.


மேலும் படிக்க | Viral video: ஆக்கிரோஷமாக தாக்கும் கீரி; எதிர்கொள்ள முடியாமல் தவிக்கும் நாகம்!


மேலும் படிக்க | மானை இறுக்கும் மலைப்பாம்பு; சிக்கித் தவிக்கும் மான்... ஆனால்... நடந்தது என்ன..!! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ