பேரப்பிள்ளைகளுடன் தாத்தா செய்யும் சேட்டை! சூறாவளியிலும் ஸ்வீட் அனுபவம்-வைரல் வீடியோ..
Viral Video : சென்னை மழை, சில நாட்களுக்கு முன்பு நம்மை வாட்டி வதைத்ததை தொடர்ந்து, அதிலும் ஒரு குடும்பத்தினர் மகிழ்ச்சியாக ஆட்டம் போடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Viral Video : சில நாட்களுக்கு முன்னர், தமிழகத்தையே சூரையாடியது ஃபெஞ்சல் புயல். வருடா வருடம் தமிழகத்தை மழை ஒரு கை பார்ப்பதும், அவ்வப்போது புயல் வந்து எட்டி பார்ப்பதும் வாடிக்கையாகி வருகிறது. அப்படி, சமீபத்தில் தமிழகத்தின் பல பகுதிகளை தாக்கியது, ஃபெஞ்சல் புயல்.
ஃபெஞ்சல் புயல்:
2015ஆம் ஆண்டிற்கு பிறகு, தமிழகத்திற்கு மழை என்ற அறிவிப்பு வந்தாலே, பலருக்கும் பயம் கிளம்ப ஆரம்பித்து விட்டது. காரணம், அந்த வருடத்தில் வந்த மழை பலரை தங்களது வீடு-வாசலை இழக்க செய்தது. அப்படி, இந்த வருடத்தில் வந்த ஃபெஞ்சல் புயலும் மக்களை நிலை குலைய செய்யுமோ என்ற பயம் ஏற்பட்டது. நினைத்தது போல, திருவண்ணாமலை, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளை ஃபெஞ்சல் புயல் சூரையாடிவிட்டு சென்றது.
சென்னையை ஃபெஞ்சல் புயல் தாக்கினாலும், இங்கு பாதிப்பு குறைவாகவே இருந்தது. ஆனால் இதிலும், ஒரு தாத்தாவும் அவரது பேரப்பிள்ளைகளும் மழையில் செய்த அட்டகாசம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
வைரல் வீடியோ:
28 வினாடிகள் கொண்ட அந்த வீடியோவில், மழை காரணமாக வீட்டின் முன்னர் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதை பார்த்ததும் குஷியான தாத்தா, தனது பேரப்பிள்ளைகளை ரப்பர் படகு ஒன்றில் உட்கார வைத்து தனது ஸ்கூட்டரின் ஒரு ரோப்புடன் இணைத்து மெதுவாக அதை ஓட்டிக்கொண்டு செல்கிறார்.
பின்னால் அமர்ந்திருக்கும் குழந்தைகளும் குதூகலமாக அதில் பயணம் செய்கின்றனர். அந்த குழந்தைகளை, அவர்களது தாத்தா, தண்ணீரில் இருந்து தள்ளி இருக்குமாறு அறிவுருத்துகிறார். தற்போது இந்த வீடியோ பல ஆயிரம் லைக்ஸ்களை கடந்து, பல மில்லியன் வியூஸ்களையும் பெற்றிருக்கிறது.
மேலும் படிக்க | வீல் சேர் உடன் 117 அடி உயரத்தில் இருந்து குதித்த நபர்!! வைரலாகும் வீடியோ..
மேலும் படிக்க | சரக்கடித்து தள்ளாடிய நாய்! விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் வைரல் வீடியாே..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ