Tamil Nadu Today Latest News Live Updates: வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் கரையை கடந்து விட்டது. இந்த புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்து மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. மழை நின்ற பின்னரும் பாதிப்புகளில் இருந்து மீள முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். மிகப்பெரும் சோகமாக, திருவண்ணாமலையில் நிலச்சரிவில் சிக்கி 7 பேர் பலியாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. பெஞ்சல் புயல் நிவாரண பணிகள், இன்றைய வானிலை உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகளின் லேட்டஸ்ட் அப்டேட்களை இங்கு காணலாம்.