பாம்பு என்ற பெயரைக் கேட்டாலே படையே நடுங்கும். அதிலும் ராஜ நாகம் அல்லது நாக பாம்புகள்  என்பது மிகவும் ஆபத்தான, அதிக விஷம் கொண்ட பாம்பாக கருதப்படுகிறது. நாக பாம்புகள் கண்ணிமைக்கும் நேரத்தில், பறவைகள், எலிகள், பல்லிகள் மற்றும் குஞ்சுகளை தனக்கு இரையாக ஆக்கி விடும். அதுமட்டுமின்றி, இந்த வகை பாம்புகள் மனிதரை தாக்கினால், அதனால் உயிரிழக்கும் அளவுக்கு விஷத்தன்மை கொண்டவை. ராஜ நாகப்பாம்பு சிறிய உயிரினங்களை எப்படி வேட்டையாடுகிறது என்பது சமீபத்திய வைரல் வீடியோவில் காணலாம். வீடியோவில் கோழி தனது குஞ்சுகளுடன் ரகசிய இடத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருப்பதைக் காணலாம். ஆனால் பின்னர் ராஜ நாகம் குஞ்சுகளை இரையாக்க அங்கு வந்து சேர்ந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், நாகப்பாம்பு குஞ்சுகளை இரையாக்க துடிப்பதைக் பார்க்கலாம். கோழியின் கண்கள் தன்மீது படாத வகையில் குஞ்சுகளை ரகசியமாக குறிவைக்கப் நினைக்கிறது. ஆனால், தனது குஞ்சுகளை காப்பாற்ற,  கோழி சிறிது அஞ்சாமல், உயிரை துச்சமாக மதித்து ராஜ நாகத்துடன் சண்டையிடுகிறது. இரண்டுக்கும் இடையே நீண்ட நேரம் சண்டை நடக்கிறது.  சண்டையின் போது பல முறை பாம்பும், கோழியை  கொத்த முயற்சிக்கிறது. ஆனால் கோழி பயமின்றி நாகத்தை எதிர்கொண்டு தன் குஞ்சுகளைக் காப்பாற்றுகிறது.


மேலும் படிக்க | Viral Video: மலைப்பாம்பிடம் சிக்கிய முதலை... திக் திக் நிமிடங்கள்


கோழிக்கும் நாகப்பாம்புக்கும் நடக்கும் போரைப் கீழே காணலாம்:



ராஜ நாகத்தின் தாக்குதலால், முதலில் கோழி சிறிது அதிர்ச்சியடைந்தது. ஆனால் தைரியம் இழக்காமல் குஞ்சுகளைக் காப்பாற்றுவதற்காக ராஜ நாகப்பாம்பை எதிர்த்து நின்றது. பல முயற்சிகளுக்குப் பிறகு, தனது குஞ்சுகளை பாம்புக்கு எட்டாத இடத்திற்கு அழைத்துச் சென்றது. வைரலாகி வரும் நாக பாம்பு வீடியோ WILD COBRA என்ற யூடியூப் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த வீடியோ இதுவரை 3 கோடிக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க |  Viral video: ஆக்கிரோஷமாக தாக்கும் கீரி; எதிர்கொள்ள முடியாமல் தவிக்கும் நாகம்!


மேலும் படிக்க | மானை இறுக்கும் மலைப்பாம்பு; சிக்கித் தவிக்கும் மான்... ஆனால்... நடந்தது என்ன..!! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ