ஜகார்தா: இணையம் தனி உலகமாக இயங்கி வந்தாலும், நாம் கற்பனைக்கூட செய்து பார்க்க முடியாத பல வித விஷயங்களை பற்றி தெரிந்துகொள்கிறோம். சமூக ஊடகங்களில் பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் பல வித்தியாசமான செய்திகளை கொடுகின்றன. அவற்றில் பயனுள்ள பல தகவல்கள் மட்டுமல்ல, ஜாலியாக பொழுதைப் போக்கும் பொழுதுபோக்கு அம்சங்களும் இருக்கிறது. நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை மறந்து வாய்விட்டு சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் பதிவுகளில் வீடியோக்கள் முதலிடத்தில் உள்லன. அதிலும் விலங்குகளின் வீடியோக்கள் பார்ப்பவர்களை அசர வைக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விலங்குக்களின் வீடியோக்களை பார்த்து ரசித்து, கமெண்ட் போட என, ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நடைபெறும் சம்பவங்களும், குறும்பும் நாம் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாதவை. அப்படிப்பட்ட வீடியோக்கள் இணையத்தில் வைரலாகின்றன. அதிலும் குதிரை என்பது சக்திக்கும், ஆற்றலுக்கும் பெயர் போனது.


மேலும் படிக்க | எடுத்தேன் பாரு ஓட்டம்...நபரை ஓடவிட்ட காட்டு யானை: வீடியோ வைரல்


வனவிலங்குகள் தொடர்பான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் அடிக்கடி வைரலாகின்றன. விலங்குகளில் குரங்கு, யானை, பாம்பு, நாய் என இவற்றின் வீடியோவுக்கு தனி மவுசு இருந்தாலும், அண்மையில் சமூக ஊடகங்களில் பட்டையைக் கிளப்பும் ஒரு குதிரை வீடியோ வைரலாகிறது.


கடற்கரையில் விளையாடும் குதிரைகளை பார்த்ததுண்டா? அப்படி ஒரு வீடியோ வெளியானால் யார் தான் பார்க்க மாட்டார்கள்? நீங்கள் முதலில் இந்த வைரல் வீடியோவை பாருங்கள்



அழகான கடற்கரையில் குதிரை சவாரி செய்வதை விட அற்புதமான அனுபவம் எது? இந்தோனேசிய ரிசார்ட் நிஹி சும்பாவில் குதிரைகள் ஜாலியாக பொழுதைப் போக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது.


இது குதிரையின் ரிட்டையர்மெண்ட் வாழ்க்கை! பார்த்து கண்ணு போடாதீங்க என்று இந்த குதிரைகள் சொல்கிறதோ? ஜாலியான ரிடையர்மெண்ட் லைஃப்! வாழ்க்கைக்கு கடிவாளம் போடாதீங்க என்று எஞ்ஞாய் பண்ணும் இந்தோனேசிய குதிரைகள் வீடியோ வைரலாகிறது. இந்த வீடியோ, @Gabriele_Corno என்ற டிவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.


குதிரைகள் போட்டி பந்தயத்தின் மூலம் பொழுதுபோக்கின் மைய ஆதாரமாகவும் உள்ளன. இந்தோனேசியாவின் சும்பா தீவில் திருமணத்திற்கு வரதட்சணையாக குதிரை வழங்கப்படுகிறது. இந்தோனேசியாவின் சும்பா தீவின் பாரம்பரிய மரபு நம்பிக்கையை ஒட்டி இறுதிச் சடங்குகளில் அவை பலியிடப்பவதும் கவலைக்குரிய விஷயம் ஆகும். 


மேலும் படிக்க | Viral Video: கோயிலில் யானை சிலையின் நடுவில் சிக்கிக் கொண்ட பக்தர்... வைரலாகும் வீடியோ!


குதிரைகள் ஓய்வு பெற்ற பிறகு என்ன செய்யும்? அவை உல்லாசமாக கடற்கரையில் வாழ்க்கையை அனுபவிக்கும் என்றால் நம்ப முடிகிறதா? பந்தயக் குதிரைகளாக இருந்து, ஒரு கட்டத்தில் ஓய்வு கொடுக்கப்படும் குதிரைகளை பராமரிக்கும் வழக்கம் இந்தத் தீவில் உள்ளது. முன்னாள் பந்தயக் குதிரைகள் தங்கள் வேலை வாழ்க்கையின் முடித்துக் கொண்டு ஓய்வுக்காலத்தில் அலட்சியப்படுத்தப்படும். 


ஆனால், அதற்குப் பதிலாக, நிஹி கடற்கரையில் தங்களுடைய பணி ஓய்வு பெற்ற வாழ்நாட்களைக் கழிப்பதற்காக அருமையான சந்தர்ப்பத்தை சிலர் ஏற்படுத்திக் கொடுக்கின்றனர்.  


சும்பா பந்தய தொழுவங்கள் அல்லது உள்ளூர் கிராமங்களில் இருந்து  குதிரைகளை வாங்குபவர்கள், அவற்றின் நல்வாழ்வை  உறுதி செய்கின்றனர். சும்பாவில் உள்ள குதிரைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு முக்கிய பிரச்சனையாக இருக்கிறது. இப்படி பல பிரச்சனைகளுடன் பெரும்பாலான குதிரைகள் கஷ்டப்பட்டாலும், தன்னார்வலர்கள் மற்றும் குதிரை உரிமையாளர்களின் முயற்சியால் சில குதிரைகள் வாழ்க்கையை அனுபவைக்கின்றன.


மேலும் படிக்க | வாடா மோதி பாத்திரலாம்....நரியை ஓட விட்ட பாம்பு: வீடியோ வைரல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ