போட்டோஷூட் செய்த ஜோடி, பீதி காட்டிய யானை: கேரளா வைரல் வீடியோ

Wedding Photoshoot Elephant Attack:கேரளாவின் ஒரு ஃபோட்டோ ஷூட் வீடியோ வைரலாக பரவி வருகிறது. யானை ஒன்று செய்த அமர்க்களம்தான் இந்த வீடியோ வைரலாகக் காரணம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 3, 2022, 03:06 PM IST
  • யானைகளின் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன.
  • இவற்றில் அவை காட்டில் அலைவதையும், சில சமயங்களில் சாலைகளில் நடப்பதையும் நாம் கண்டுள்ளோம்.
  • ஆனால் சமீபத்தில் இணையத்தில் பகிரப்பட்டுள்ள ஒரு யானையின் வீடியோ நம்மை அச்சப்படுத்தும் வகையில் உள்ளது.
போட்டோஷூட் செய்த ஜோடி, பீதி காட்டிய யானை: கேரளா வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.

 யானைகளின் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. இவற்றில் அவை காட்டில் அலைவதையும், சில சமயங்களில் சாலைகளில் நடப்பதையும் நாம் கண்டுள்ளோம். ஆனால் சமீபத்தில் இணையத்தில் பகிரப்பட்டுள்ள ஒரு யானையின் வீடியோ நம்மை அச்சப்படுத்தும் வகையில் உள்ளது. வீடியோவில், ஒரு ஜோடியின் திருமண போட்டோஷூட் நடந்து கொண்டிருப்பதை காண முடிகின்றது. அப்போதுதான் திகிலூட்டும் இந்த சம்பவம் நடக்கிறது. இது தொடர்பான பயங்கர வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

இந்த வீடியோ போட்டோஷூட்டின் வீடியோ இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த வீடியோவின் தலைப்பில் ஒரு விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது. ‘இந்த சம்பவத்திற்கு நாங்கள் பொறுப்பல்ல, இது யானை தாக்குதல் பற்றிய ஒரு சலனப்படுத்தும் வீடியோ ஆகும்’ என இதில் எழுதப்பட்டுள்ளது. போட்டோஷூட்டிற்காக நாங்கள் எந்த மிருகத்தையும் பயன்படுத்தவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. பதிவின் இறுதியில் நன்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டோஷூட்டின் போது எதிர்பாராத விதமாக யானை தாக்குதல் நடத்தியுள்ளது. 

மேலும் படிக்க | மேடையில் ‘ஸ்மோக்கி கிஸ்’ கொடுத்த மணப்பெண்: ‘இங்கயேவா’ என கலாய்க்கும் நெட்டிசன்ஸ், வைரல் வீடியோ 

திருமண போட்டோஷூட்டின் போது கிடைத்த அதிர்ச்சி

புதுமணத் தம்பதிகளின் போட்டோஷூட்டிற்காக, ஒரு கோவிலின் உள் வளாகத்தில் சிலர் இடத்தை தேர்வு செய்துகொண்டிருப்பதை வீடியோவில் காண முடிகின்றது. இதற்கிடையில், இந்த யானையும் ஜோடிக்கு பின்னால் நிற்கிறது.

அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நபர்

இந்த யானை திடீரென ஆக்ரோஷமாகி அங்கிருந்த ஒரு நபரை தாக்கியது. அதுமட்டுமின்றி, யானை அந்த நபரை தூக்கி எறிந்து, அவரது ஆடைகளையும் இழுத்தது. எப்படியோ அந்த நபர் உயிரைக் காப்பாற்றிக் கொண்டு அங்கிருந்து தப்பிவிட்டார். தற்போது இந்த போட்டோஷூட் வீடியோ வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவுக்கு இணையவாசிகள் பலவித கமெண்டுகளையும் அளித்து வருகிறார்கள். 

மேலும் படிக்க | கூப்பிட்ட பெண், ஓடோடி வந்த எருமை: இதயங்களை இளக வைக்கும் வைரல் வீடியோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News