தாயின் வயிற்று பைக்குள் செல்ல போராடும் கங்காரு குட்டி! வைரல் வீடியோ!
கங்காரு குட்டி ஒன்று அதன் தாயின் வயிற்று பைக்குள் செல்ல போராடும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
பொதுவாக கங்காருக்கள் வினோதமான விலங்கு இனங்களாக பார்க்கப்படுகிறது, ஏனெனில் இவை வயிற்றில் பையுடன் அதன் குட்டியை சுமந்து செல்கிறது. பெரும்பாலும் இந்த வகை உயிரினங்கள் ஆஸ்திரேலியாவில் தான் அதிகமாக காணப்படுகிறது. பிறந்த கங்காரு குட்டிகள் 2 கிராம் எடையுடன் இருக்கிறது, இவை 6 மாதங்கள் அதன் தாயின் வயிற்றுக்குள் இருந்து வளர்கிறது. கங்காருகள் அதன் வயிற்று பைக்குள் உள்ள குட்டி வெளியே விழுந்துவிட்டால் அது திரும்ப அதனை எடுத்து உள்ளே வைத்துக்கொள்ளாது என்றும் சில தகவல்கள் தெரிவிக்கிறது. தற்போது அதேபோல தான் தாயின் வயிற்று பையை விட்டு வெளியேறிய கங்காரு குட்டி மீண்டும் அந்த பைக்குள் செல்ல போராடும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க | நாகப்பாம்பை குளிப்பாட்டி குஷிப்படுத்திய நபர்: அதிசய வைக்கும் வைரல் வீடியோ
இந்த வீடியோவானது ட்விட்டரில் நேச்சர் லைஃப் என்கிற கணக்கு பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. அதில் தாய் கங்காரு ஒன்றும் அதனருகே குட்டி கங்காரு ஒன்றும் இருப்பதை காணலாம். அந்த குட்டி கங்காருவானது தவறுதலாக தாயின் வயிற்று பையை விட்டு இறங்கிவிட்டது போலும், அதனால் அது மீண்டும் தனது தாயின் வயிற்று பைக்குள் செல்ல போராடிக்கொண்டு இருக்கிறது. மெதுவாக தவழ்ந்து வயிற்று பைக்குள் செல்கிறது. ஆனால் அதனால் முழுவதுமாக உள்ளே செல்லமுடியவில்லை, கீழே விழுந்துவிடுகிறது. இதேபோல பலமுறை முயற்சி செய்து இறுதியாக தாயின் வயிற்று பைக்குள் கங்காரு குட்டி உட்கார்ந்து விடுகிறது.
'முயன்றால் எதையும் சாதிக்கமுடியும்' என்பதை இந்த கங்காரு குட்டி நிகழ்த்தியுள்ளது. இந்த வீடியோவுடன் அமேஸிங் நேச்சர் லைஃப் என்கிற கேப்ஷனும் சேர்த்து பதிவிடப்பட்டு இருக்கிறது. இணையத்தில் பதிவேற்றப்பட்ட இந்த வீடியோவை அறுபத்தி எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்த்து ரசித்துள்ளனர். நெட்டிசன்கள் பலரும் கங்காரு குட்டியின் செயலுக்கு கமெண்ட் செய்து வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR