இணைய உலகம் ஒரு ஆச்சரியமான உலகம். தகவல்களின் களஞ்சியமாக விளங்கும் சமூக ஊடகங்கள், நமக்கு தினமும் ஆச்சரியங்களையும் வியப்பையும் அள்ளித் தருகின்றன. சமூக ஊடகத்தில் பகிரப்படும் வீடியோக்களும் செய்திகளும் புகைப்படங்களும் நமக்கு பல அரிய தகவல்களை அள்ளி வழங்குகின்றன. அவை சில சமயங்களில் ஆச்சரியத்தை கொடுப்பதாகவும் சில சமயங்களில் அதிர்ச்சியை கொடுப்பதாகவும் அமைந்துவிடுகிறது. அந்த வகையில்,, தற்போது வைரல் ஆகி வரும் பஞ்சவர்ண கிளி ஒன்றின் வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது. இந்த வீடியோவை பார்ப்பது நிச்சயம் உங்கள் மன இறுக்கத்தை தளர்த்திக் கொள்ள உதவும். அன்றாட வாழ்க்கையின் டென்ஷன்களில் இருந்து விலகி, வாழ்க்கை ரசிக்க இது நல்ல சான்ஸ் எனலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒரு பஞ்சவர்ணக்கிளி இளைநீர் ஒன்றை மரத்திலிருந்து அசால்டாக பிடுங்கி,  வெகு நேர்த்தியக இளநீரை குடிக்கும் வீடியோ, வேகமாக வைரலாகியது. எல்லோரும், ஒரு பறவையினால் எப்படி இவ்வளவு கனமான  இளநீரை, தென்னை மரத்தில் இருந்து இலகுவாக பிடுங்கி, இலாவகமாக வெட்டி குடிக்கிறது என வியந்து எழுதியுள்ளனர்.


வைரலாகும் கிளி வீடியோவை இங்கே காணலாம்:



இந்த வீடியோ,  Buitengebieden (@buitengebieden) என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது.  கிளிப், நீலம் மற்றும் மஞ்சள் நிறத்தில் நீண்ட வால் கொண்ட கிளி இனமான பஞ்சவர்ணக்கிளி, மரத்தின் உச்சியில் அமர்ந்து இளைஇரைத் துளைத்து தண்ணீர் குடிப்பதைக் காட்டுகிறது. பறவை மரத்திலிருந்து இளநீரை அழகாக பறித்து, உடைத்து அதன் நகங்களைப் பயன்படுத்தி உள்ளே துளைத்து இளநீரைக் குடிப்பதைக் காணலாம். பறவை எவ்வளவு புத்திசாலி என்று மக்கள் வியக்கும் இந்த வீடியோ பரவலாக பகிரப்பட்டு வருகிறது. பறவை தாகமாக இருப்பதாகவும், அதனால் இளநீரை குடித்ததாகவும் பலர் கூறினார்கள். கோடையில் தாகத்தை தணித்து கொள்ள மிகவும் புத்திசாலித்தனமாக இளநீடை குடிக்கிறது என பரும் பாராஅடு மழை பொழிகின்றனர்பஞ்சவர்ண கிளி என்பது நீண்ட வாழ் கொண்ட பல வண்ணங்களைக் கொண்ட பெரிய கிளி. பஞ்சவர்ண கிளிகள் மெக்ஸிகோ மத்திய அமெரிக்கா தென் அமெரிக்கா ஆகிய இடங்களை தாயகமாகக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.


சில நாட்களுக்கு மின் கழுகின் மீன் வேட்டை ஒன்று மிகவும் வைரலாகியது. வைரலாகிய அந்த காணொளியில், கழுகு ஒன்று, தண்ணீரில் சீறிப்பாய்ந்து, மிக அழகாக வேட்டையாடுகிறது. நொடியில் அதை பிடித்து விடுகிறது. தண்ணீரில் பாய்ந்து வேட்டையாடிய மீனை மிகவும் கெட்டியாக லாபமாக, தனது அலகுகளால் பிடித்துக் கொள்கிறது. நீரில் வேட்டையாடிய மீனை, தாமதிக்காமல் நொடி பொழுதில் வானில், மீன் உயிருடன் இருக்கும் போதே, ருசி பார்க்கும் அந்த கழுகின் ஆற்றலை கண்டு இணையவாசிகள் வியந்துள்ளனர். அதனை கீழே உள்ள இணைப்பில் காணலாம்.


மேலும் படிக்க | Viral Video: வியக்க வைக்கும் ‘சூப்பர் ஸ்டார் கழுகு’... நீரில் மீன் வேட்டை... நடுவானில் மீன் விருந்து..!!


(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)


மேலும் படிக்க | இறந்த தாயை எழுப்பும் குட்டி குரங்கு: இணையத்தை அழவைத்த இழப்பு.... வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22