முதலை எல்லாம் செல்லப்பிராணியாக இருக்க முடியுமா? என்று பல வியப்புடன் கேட்கலாம். ஆனால், முதலை பண்ணை வைத்திருக்கும் இடங்களில் முதலை ஒரு செல்லப்பிராணியாக வளர்க்கிறார்கள். அங்கு முதலைக்கு அருகில் எல்லாம் சர்வ சாதாரணமாக செல்வார்கள். ஆனால், அது நல்லதல்ல. எப்போது வேண்டுமானாலும் முதலை தாக்க நேரிடலாம். எல்லா விலங்குகளைப் போலவே முதலையும் ஆபத்தான விலங்கு தான். அது குணாதிசயங்களை எல்லாம் யாரும் யூகிக்க முடியாது. எப்போது பழகிக் கொண்டே இருந்தாலும் கூட திடீரென முதலைக்கு கோபம் வந்து தாக்க வாய்ப்பிருக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | முதலிரவு வீடியோவை பகிர்ந்த ஜோடி... விடிய விடிய மாப்பிள்ளை செய்த காரியத்தை பாருங்க! 


இது ஒருபுறம் இருக்க தண்ணீரில் முன்பின் அறிமுகம் இல்லாத முதலைக்கு ஒருவர் எந்த பயமும் இல்லாமல் உணவு கொடுக்கும் வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. அமெரிக்காவின் புளோரிடா பகுதியில் அதிகளவு முதலைகள் வசிக்கும் பகுதியாக இருக்கிறது. அங்கு இருக்கும் நீர்நிலை ஒன்றில் தம்பதியினர் நீராட செல்கின்றனர். அப்போது அந்த நீர் ஓடையில் முதலை இருப்பதை பார்த்த இருவரும் துளியும் பயப்படவில்லை. மாறாக அந்த முதலையை அழைத்து உணவு கொடுக்க முற்படுகின்றனர். அவர்களின் அழைப்பை ஏற்று அருகில் வரும் முதலை, வெறும் கையில் அவர்கள் கொடுத்த உணவையும் வாங்கி சாப்பிட்டு செல்கிறது.



பார்ப்பதற்கு கொஞ்சம் பயமாக பார்வையாளர்களுக்கு இருக்கலாம். ஆனால், அந்த நீருக்குள் அமர்ந்திருந்த தம்பதிக்கு இல்லை. அவர்களுக்கு ஏற்கனவே முதலை குறித்த புரிதல் இருந்திருக்கிறது. அதனால் தான் எந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கையும் இல்லாமல் அசால்டாக முதலையை நீரில் அழைத்து உணவு கொடுக்கின்றனர். இதற்கு அந்த தம்பதிக்கு உண்மையிலேயே மிகப்பெரிய தைரியம் தான் காரணம். onlyFlorida என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருக்கும் இந்த வீடியோ பல ஆயிரக்கணக்கான பார்வைகளை பெற்று டிரெண்டிங் லிஸ்டிலும் இடம்பிடித்திருக்கிறது.


மேலும் படிக்க | Viral Video: மங்காத்தாவாக மாறிய மயில்! முட்டைகளை திருட வந்த சிறுமி அலறி ஓடிய சம்பவம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ