முதலிரவு வீடியோவை பகிர்ந்த ஜோடி... விடிய விடிய மாப்பிள்ளை செய்த காரியத்தை பாருங்க!

Wedding First Night Viral Video: திருமணத்தில் தாலி கட்டுவது, முத்தம் கொடுப்பது, நடனமாடுவது ஆகிய வீடியோக்களை தானே ஜோடிகள், இதுவரை இணையத்தில் பகிர்ந்து வந்தனர், ஆனால் தற்போது ஒரு ஜோடி தங்களின் முதலிரவு வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளனர். 

Written by - Sudharsan G | Last Updated : Mar 26, 2023, 07:14 PM IST
  • அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
  • அந்த வீடியோ கடந்த மாதம் இன்ஸ்டாவில் வெளியிட்டனர்.
முதலிரவு வீடியோவை பகிர்ந்த ஜோடி... விடிய விடிய மாப்பிள்ளை செய்த காரியத்தை பாருங்க!

Wedding First Night Viral Video: இணையத்தில் வீடியோ, புகைப்படம், சமூக வலைதள பதிவு, மீம் ஆகியவை வைரலாவது வாடிக்கைதான் என்றாலும், மனிதர்களின் வித்தியாசமான செயல்கள், வினோதமான நடவடிக்கைகள் உள்ளிட்டவையும், விலங்குகளின் செயல்களும் கூட அனைவராலும், பகிரப்பட்டு அதனை பார்ப்பதிலும் ஆர்வங்காட்டுகின்றனர். 

எனவே, நெட்டிசன்களுக்கு தன்னுடைய வீடியோவோ, புகைப்படமோ எதாவது ஒன்று வைரலாக வேண்டும் என்பது தற்போது காலகட்டத்தில் மிகப்பெரிய கட்டாயமாகி உள்ளது. இந்த 'வைரல்' தொற்று, பலரையும் பாதித்திருந்தாலும், ஒரு சிலரின் வீடியோக்கள் வைரலாக வேண்டும் என்பதற்காக எடுக்கப்பட்டதாக இருக்கும், சிலவை யதார்த்தமாக எடுக்கப்பட்டவையாக இருக்கும். 

மேலும் படிக்க | மேடையிலேயே மாப்பிள்ளை செய்த வேலை: ஷாக்கில் மணப்பெண், வைரலாகும் வீடியோ

முதலில், டிக்டாக், ரீல்ஸ் ஆகியவற்றில் திரைப்படம் சார்ந்த வீடியோக்கள்  வைரலாகி வந்த நிலையில், தற்போதெல்லாம் திருமண  நிகழ்வு உள்ளிட்ட குடும்ப நிகழ்வுகளும் வைரலாகின்றன. இதில், திருமண நிகழ்வை நீங்கள் தவிர்க்கவே முடியாது. திருமணம் சார்ந்த ஆயிரக்கணக்கான வைரல் வீடியோக்கள் இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றன. அந்த வகையில், தற்போது வைரலாகி வரும் இந்த வீடியோ திருமணத்தின் அன்று நடக்கும் முதலிரவு நிகழ்வு குறித்த வீடியோவாகும். 

வைரல் வீடியோ:

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rahul & Arushi (@arushirahulofficial)

இந்த வீடியோவை, ஆருஷி மற்றும் ராகுல் என்ற தம்பதியினர் தங்கள் இன்ஸ்டாவில் கடந்த மாதம் நடைபெற்ற அவர்களின் திருமணத்தையொட்டி, அந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர். வீடியோ வெளியிட்டு சுமார் ஒரு மாதம் தாண்டிய பின்னர், தற்போது அந்த வீடியோ வைரலாகி உள்ளது. பொதுவாக, திருமணத்தில் தாலி கட்டும் நிகழ்வு, சில முத்தமிடும் தருமணம், மணமக்கள் நடனமாடுவது ஆகியவற்றைதான் ஜோடிகள் வெளியிட்டு பார்த்திருப்போம், ஆனால் இவர்கள் தங்களின் முதலிரவு வீடியோவை வெளியிட்டு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளனர். 

அந்த வீடியோவில் இருவரும் ரொமான்ஸ் செய்யும் நிலையில், மணப்பெண்ணின் உடைகளை அதாவது ஆபரணங்களையும், மேக்கப்களையும் அகற்றுவதில் அந்த மணமகன் உதவிசெய்கிறார். அந்த வீடியோவில்,"எங்களின் திருமணத்தின் முதலிரவு இப்படிதான் கழித்தோம்" என குறிப்பிட்டுள்ளனர். மேலும், கேப்ஷனில் எதிர்பார்ப்பும், நிதர்சனமும் என குறிப்பிட்டுள்ளனர். 

அலங்காரங்களை அகற்றுவதிலேயே முதலிரவு முடிந்துவிட்டது என கூற வருகிறார்களா என நெட்டிசன்கள் இதை கலாய்த்தும் வருகின்றனர். மேலும், ஒருவரோ,"இந்த வீடியோவை இன்னும் அதிகமாக வெளியிட்டால், இன்னும் அதிகமாக வைரலாகியிருக்கும்" என பதிவிட்டிருந்தார். சில விஷயங்களை தனிப்பட்ட முறையில் வைத்துக்கொள்வதுதான் சரி என பலரும் இதற்கு பதல் அளித்து வருகின்றனர். இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியாகி ஐந்து வாரங்கள் ஆகும் நிலையில், இதுவரை, 30 ஆயிரம் பேர் அதனை லைக் செய்து, 13 லட்சம் வியூஸ்களை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | மேடையிலேயே இப்படியா? தாலி கட்டிய உடனேயே மணமக்கள் செய்த வேலை, வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

More Stories

Trending News