Viral Video: ஒவ்வொரு முறையும் வித்தியாசமான வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆவது வழக்கம்.  அந்த வகையில் தற்போது புதிய விதமான புல்லட் ஒன்று ட்ரெண்ட் ஆகி உள்ளது.  அளவில் மிகவும் சிறியதாக, குழந்தைகள் ஓட்டுவது போல் இருக்கும் மினி புல்லட் ஒன்றை ஒருவர் ஓட்டி செல்லும் வீடியோ வைரல் ஆகி வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் ராம்மி ரைடர் (@rammyryder) என்ற பயனர் பகிர்ந்துள்ளார். டெல்லியில் உள்ள தெருவில் ஒரு நபர் ஒரு சிறிய இளஞ்சிவப்பு நிற புல்லட்டை மிகவும் வசதியாக ஓட்டிச் செல்வதை இந்த வீடியோ காட்டுகிறது.  "இந்தியாவில் மினி புல்லட்" என்று அந்த வீடியோ கிளிப்பில் பதிவு செய்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | இந்த வீடியோவை ஒருமுறை பாருங்க.. இனி ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிடவே மாட்டீங்க


இந்த பைக் சைக்கிளை விட சிறியதாக உள்ளது போல் தெரிகிறது. இந்த புல்லட் தெருவில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது, அந்த பகுதியில் உள்ள மக்கள் இதனை அதிர்ச்சியும் ஆச்சரியமும் பார்த்து செல்கின்றனர்.  இந்த வீடியோ 425,000 க்கும் மேற்பட்ட லைக்ஸ்களையும், 5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளையும் குவித்துள்ளது. இந்த வீடியோவிற்கு பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.  சிலர் இந்த தனித்துவமான இரு சக்கர வாகனத்தை எங்கே வாங்கலாம் என்றும், ​​மற்றவர்கள் அதை "பார்பி புல்லட்" என்று பதிவிட்டு வருகின்றனர். 



"இது மிகவும் அழகாக இருக்கிறது. எனக்கு அது வேண்டும்," என்று ஒரு பயனர் பதிவிட்டுள்ளார். " இது போல் வாகனங்களில் விபத்துகள் பாதி அளவு குறையும்" என்று மற்றொருவர் பதிவிட்டுள்ளார்.  மூன்றாவது பயனர், "இறுதியாக நான் பாதுகாப்பாக சவாரி செய்யக்கூடிய ஒரு வண்டி" என்று கூறினார், மற்றொருவர் நகைச்சுவையாக, "இந்த பைக்கைப் பார்த்தவுடன் என் கால்கள் மற்றும் முதுகில் பிடிப்புகள் ஏற்பட ஆரம்பித்தன" என்று கூறினார்.  இதற்கிடையில், இந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மேலும் பல வீடியோக்கள் பதிவாகி உள்ளன.  மேலும்,  ஆச்சரியம் என்னவென்றால் ஆக்டிவா ஸ்கூட்டரில் இருந்து அவர் இந்த பைக்கை உருவாக்கி உள்ளார். தனித்துவமான இந்த மினி பிங்க் புல்லட்டை உருவாக்க அவரது பழைய வண்டியை மாற்றியமைத்துள்ளார்.



மேலும் படிக்க | ஸ்டேஷனில் ரயிலுக்காக காத்திருந்த யானை! இணையத்தில் வைரலாகும் வீடியோ!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ