யானைகள் மிகவும் புத்திசாலித்தனமான உயிரினங்கள். அவை மனிதர்களைப் போலவே தங்கள் குடும்பத்தை பாதுகாக்கிறார்கள். சில சமயங்களில் அவர்களுக்காக தன் உயிரையும் கூட பணயம் வைத்து போராடும். பெண் யானையும் தன் குழந்தைகளை மனிதத் தாயைப் போல் கவனித்துக் கொள்கிறது. அதை விளக்கும் வகையில் தற்போது ஒரு யானையின் வீடியோ வைரலாகி வருகிறது, அதில் ஒரு தாய் யானை தனக்கு பிறந்த குழந்தைக்கு நிற்க கற்றுக்கொடுக்கிறது. இதைப் பார்த்தாலே புரியும், குழந்தைகள் உலகில் எவ்வளவு பெரிய அடி எடுத்து வைத்தாலும், அதற்கு முதல் அடி எடுத்து வைக்க உதவுவது அம்மா தான்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Latest Sightings என்ற  யூடியூப் சேனலில் விலங்குகள் தொடர்பான, வியப்பை அளிக்கும் வகையில் ஆச்சரியமான வீடியோக்கள் அடிக்கடி வெளியிடப்படுகின்றன. சமீபத்தில் இந்த சேனலில் ஒரு யானை தனது குழந்தைக்கு நிற்கவும் நடக்கவும் கற்றுக்கொடுக்கும் வீடியோ பகிரப்பட்டது. காட்டு பகுதியில் வழிகாட்டியான பணிபிரியும் 31 வயதான பிரட், சஃபாரிக்கு சென்றபோது இந்த வீடியோவை பதிவு செய்ததாக வீடியோவில் பதிவிடப்பட்டது. கென்யாவின் காடுகளின் வீடியோக்கள் இந்த சேனலில் அடிக்கடி வெளியிடப்படுகின்றன. எனவே அந்த வீடியோ கென்யாவிலிருந்து மட்டுமே என்று யூகிக்கலாம். ஆனால், வீடியோவில் எடுக்கப்பட்ட இடம் தொடர்பான தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.


பிறந்த குட்டிக்கு உதவிய யானை 
காணொளியில் பெண் யானை ஒன்று குட்டியை ஈன்றுள்ளது. ஆனால் பிறந்த பிறகு, குழந்தை தனது காலில் நிற்க முடியாத நிலை உள்ளது. விலங்குகள் பிறந்தவுடனே காலில் நிற்கும். ஆனால் இந்த குட்டி யானை தரையில் மீண்டு மீண்டும் விழுகிறது. பின்னர் மீண்டும் மீண்டும் எழுந்திருக்க முயற்சி செய்கிறது, ஆனால் மீண்டும் எழுந்திருக்க முடியாமல் போராடுகிறது. அதனுடைய அம்மா மிகவும் மன வருத்தத்துடன், மிக குட்டிக்கு அருகில் வேகமாக ஓடி வந்து உதவ ஆரம்பிக்கிறது. தனது தும்பிக்கையால் குட்டியைத் தூக்க முயல்கிறது. மிகவும் சிரமப்பட்டு அதனை தனது காலில் நிற்க வைக்க போராடுகிறது. இறுதியில், குழந்தை எந்த ஆதரவும் இல்லாமல் தானாகவே எழுந்து நிற்கிறது.


வைரலாகி வரும் குட்டியானை வீடியோவை இங்கே காணலாம்



வைரலாகி வரும் குட்டியானை வீடியோ


யானையின் இந்த வீடியோ 22 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது, பலர் தங்கள் கருத்துக்களைக் கருத்துத் தெரிவித்தனர். இயற்கையில் இது போன்ற தருணங்கள் மனதைத் தொடும் என்று ஒருவர் கூறினார். அவர் ஒரு அற்புதமான தாய் என்று ஒருவர் கூறினார். இது மிகவும் அழகான காட்சி, அதைப் பார்த்ததும் அவரது கண்கள் கண்ணீர் வழிந்தன என்று ஒருவர் கூறினார். இதை பதிவு செய்ததற்கு நன்றி, வீடியோ தனது இதயத்தை தொட்டதாக ஒருவர் கூறினார்.


யானைகள், குரங்குகள் மற்றும் டால்பின்கள் போன்றவை மற்ற விலங்குகளை போல அன்றி, விதிவிலக்காக புத்திசாலித்தனமான உயிரினங்கள் என விலங்குகளை ஆராய்ச்சி செய்யும் நிபுனர்கள் கூறுகின்றனர். யானைகளும் நம்மைப் போலவே எண்ணங்கள், ஆழமான உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளை அனுபவிக்கும் திறன் கொண்டவை. குட்டி யானைகளைப் பார்ப்பதே ஒரு மகிழ்ச்சியான அனுபவம் தான். ஒரு இடத்தில் நிற்காமல் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டே இருக்கும் குட்டி யானைகள் தூங்கினாலும், குளித்தாலும், சாப்பிட்டாலும் அல்லது விளையாடினாலும் என எது செய்தாலும் அவை ரசிக்கத் தகுந்ததாகவே இருக்கும். 


மேலும்  படிக்க |  கலிகாலம் தான்... நூடுல்ஸ் போல் பாம்பை உயிருடன் கபளீகரம் செய்யும் தவளை... திகிலூட்டும் வீடியோ!


(இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ